Sunday, June 19, 2011

கடவுள் பற்றி இந்துக்களின் புரிதல் சரியா?


இந்துக்களை பொறுத்தவரையில் அவர்களின் கடவுள் கொள்கை எளிமையானது. கருமாரி அம்மனையோ, ஐய்யப்பனையோ, முருகனையோ, இராமரையோ….. அவர்கள் குடும்பத்தில் முக்கியமாக வழிபடும் கடவுளை கும்பிடுகின்றனர். “நாம கும்பிடர சாமி நம்மைக் காப்பாத்தும்” என்று நம்பும் அவர்களின் கோட்பாடு எளிமையானது.
 இதிலே ஒரு முக்கிய  விடயம்  என்னவென்றால், இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்பது போன்றவற்றையோ சொன்னதாக இல்லை. இது விடயமாக சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது, தான் ஒரு இனத்தை மட்டுமே முன்னுரிமை குடுத்து வாழ  வைப்பேன் என்று இந்துக் கடவுளாவது  சொன்னதாக இருக்கிறதா, எந்த இந்து மத நூல்களிலாவது அப்படிக் காட்ட முடியுமா என்று சொல்லி இருக்கிறார்.
எனவே முருகனை வணங்குபவர் வாய்ப்பு கிடைக்கும் போது வெங்கடாசலபதியையோ, லக்ஷ்மியையோ…. வணங்கவும் செய்கின்றனர்.
இன்னும் சொல்லப் போனால் இந்துக்கள் மேரி மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கின்றனர். மசூதிக்கு சென்று சுகம் இல்லாத  பிள்ளைகளுக்கு மந்திரிக்கினறனர்.
இந்து மத்திலே எளிமையான மக்களின் இந்த  அமைதியான கடவுள் கோட்பாடு இவ்வாறு இருக்க, இந்து மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் இன்னும் பல ஆழமான சிந்தனைகளை முன் வைக்கினனர். மனிதனின் உயிர் (soul), கடவுள் என்கிற நிலைக்கு உயர முடியும்,  அடைய முடியும் என்பதை இந்து மதத்தின் முக்கிய கோட்பாடாக பல பண்டிதர்கள் சொல்லுகின்றனர். இதிலே சில சிந்தனையாளர்கள் ஒரே கடவுள்தான் உருவமற்ற நிலையிலும், உருவமுள்ள நிலையிலும் இருப்பதாகவும் அதே கடவுள் பல  அவதாரங்களை உருவங்களை எடுப்பதாகவும் சொல்லுகின்றனர்.
இந்தக் கோட்பாட்டை ஆராயும் போது இதிலே சில சந்தேகங்கள் வருவதாகவும், சில முரண்பாடுகள் தோன்றுவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது பற்றி அன்புக்குரிய நண்பர் திரு. ரசீன் அவர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டு தன்னுடைய வினாக்களை எழுப்பியுள்ளார்.
கடவுள்!…. ஹிந்துக்களின் புரிதல்….


மனிதன் ஒருவனாக இருந்தாலும்,மகன் வேறு,கணவன் வேறு,சகோதரன் வேறு.இது எல்லாமேசுவாமிநாதன்தானேன்னு,அம்மா அவனை வேறு பெயர்களில் அழைக்க் முடியாது.அதுபோலசுவாமிநாதனும்,தாயிடம் மகனாக மட்டும்,மனைவியிடம் கணவனாக மட்டும்,பிள்ளைக்குதகப்பனாக மட்டும் தங்கைக்கு அண்ணனாக மட்டும் இருக்கமுடியும்அதில் மாற்றம் வந்தால்,அதை விட கொடுமை ஏதும் இருக்க முடியாது..
இதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்…. ஆனால் கடவுள்அப்படி இல்லையே..அவன் எல்லாருக்கும்எல்லாக் காலங்களிலும்எல்லாமுமாய்இருக்கக்கூடியவன் ஆயிற்றே..அவன் ஒருவனுக்கு ஒருமாதிரியும்,மற்றவனுக்கு வேறுமாதிரியும்இருப்பதில்லையே..   அவர் சொன்ன அதே உதாரணத்தை ஹிந்து கடவுள்களுக்கு பொருத்திப்பார்த்தோமானாலும்,அவையும் பொருந்தாத ஒன்றாகவேஇருக்கிறதுசிவன்,பிள்ளையார்,முருகன்,ராமன்,ஹனுமன்,காளி,மாரியம்மன்என எண்ணில்அடங்காத ஆண்பெண் கடவுளர்கள் ஹிந்துமதத்தில் உண்டு… முதலில்,இத்துனை பெயர்களில்வழங்கப்படும் அந்த ஒற்றைக்கடவுள் யார்??? இப்போ சகோ பிரதாப்பின் கூற்றுப்படி எல்லாம்ஒரே கடவுள்.அவருக்கு,பல பெயர்கள் என்றால்.முருகனை,விநாயகா!… அப்டீன்னோசிவனை,காளின்னோராமனைமாரின்னோ வணங்க முடியுமா???,,,அப்படி முடிந்தால் தானேஅவர் கூற்றுமெய்யாகும்அப்படி முடிந்தால்தானே….அனைத்து கடவுளும் ஒன்று என்ற நிலை வரும் ஆனால்அது சாத்தியமா?..  


இல்லையேஎல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னுசொல்பவரே… இப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்என்னசொல்வார்அட பைத்தியக்காரா!!!…எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடாநல்லாப்பாரு….இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???…..


திரு ரசீன் அவர்கள் கேட்டது போல, முருகன் சந்நிதானத்தில்  சென்று “இராமா” என்று  கூப்பிட்டு யாரும் வணங்குவது   இல்லை. அப்ப முருகன் வேறு, இராமன் வேறு தானே, இராமனும் முருகனும் , பிள்ளையாரும், காளியும் … எல்லாம் எப்படி ஒன்றே என கருதப் பட முடியும் என்கிற கேள்வியை கேட்கிறார்.
 இந்துக்கள் வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளன. இராமரின் தத்துவமானது மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பங்களை ஏற்றுக் கொள்ளும்  தியாகத்தின் தத்துவமாக , பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போனறது, கொள்கை  என்பது இடுப்பில் அணியக் கூடிய வேட்டி போன்றது என்கிற கொள்கையை வாழ்ந்து காட்டியவராக, தன மனைவியை தவிர பிற பெண்களை எண்ணாத   விரும்பாத வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டியவராக உள்ளார்.
அனுமனின் கோட்பாடோ, நல்ல கோட்பாடுகளை உடைய ஒரு நல்லவர் , அவர் வாழ்க்கையில் இவ்வளவு தியாகம் செய்தும், அவருக்கு இத்தனை துன்பங்களா என்று இனி, எந்த ஒரு பிரதிபலனும் கருதாமல் நியாயத்துக்காக போராடிய மாவீரனின் கோட்பாடாக உள்ளது. பதவியையோ, செல்வத்தையோ எதிர்பார்க்கவில்லை அனுமன்.
துர்க்கை, காளி ஆகியோர் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளை எதிர்த்து சீறி, அநியாய அக்கிரமக்காரர்களை கருவறுக்கும் பெண்மையின் வீரத்தை கோட்பாட்டை விளக்கும் வகையில் உள்ளது.
நாட்டை விட்டுக் கொடுத்து காட்டுக்கு சென்ற , ஏக பத்தினி விரதனாக அவதரித்த அதே கடவுள்,    அக்கிரம கொடுங்கோலனை பொறுக்காமல் பெண்ணே சிலிர்த்து  சீறி போராடும் கோட்பாட்டை சொல்லும் போது காளியாக பெண்ணாகத்தான் தானே வடிவெடுக்க முடியும்.
 எனவே ஒருவன்  காளியை வழி படும் போது, “பொம்பளைங்க கைல ராங் காட்டாத நைனா, அவங்களுக்கு கோவம் வந்தா சீறி உன் தலையை சீவிடுவாங்க, கடவுளே அதைக்  காட்ட காளியா வந்துக்குரா” என்கிற சிந்தனையை பெறுகிறான்.
அவனே   இராமர் சந்நிதிக்கு வரும்போது, சீதையை பார்க்கும் போது, ஆண்களின் காமத்தால் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது, இராமனைப் போல மனைவியைத் தவிர பிற பெண்களை இச்சை கொள்ளாமல் வாழ்ந்தால் சமூகத்துக்கு நல்லது என்கிற சிந்தனை நிச்சயம் வரும்.
எனவே ஒரு கடவுள், அவ்வப் போது சூழ்நிலைக்கு ஏற்ப  ஆணாகவும்,  நேரத்தில் பெண்ணாகவும் வடிவெடுத்து வரக் கூடும் என்பதே இதன் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளலாம். 
திரு. ரசீன் எழுப்பிய பிற சந்தேகங்களுக்கான விளக்கத்தை நாம் பிற கட்டுரைகளில் தொடர்ந்து வழங்குவோம்.
(தொடரும்)






இல்லையேஎல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னுசொல்பவரே… இப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்என்னசொல்வார்அட பைத்தியக்காரா!!!…எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடாநல்லாப்பாரு….இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???…..