நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு …. என்று சொல்லுபவர்களை பிடிவாதக்காரர்கள் என்கிறோம் அல்லவா,
பல முறை முயல்களை பிடித்து எத்தனை கால்கள் உள்ளன என்று அறியத் தர முடியும். ஆனாலும் பிடிவாதக்கார நண்பர் விடாமல் நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லி தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் செயல்படுவார்.
இதை எல்லாம் பார்க்கும் பொது மக்களும், பிடிவாதக்காரரின் சமாளிப்பு செயல் என்பதை புரிந்து கொள்வார்கள். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிற பிடிவாதத்தை விட ஆபத்தான பிடிவாதம் கடவுள் கோட்பாட்டு பிடிவாதம்.
நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிறவர்களாவது இருக்கின்ற ஒரு விடயத்தை பிறர் காணக் கூடிய, உணரக் கூடிய விடயத்தை பற்றி சொல்லுகிறார்கள்.
ஆனால் இந்த கடவுள் என்பது இல்லாத ஒன்று அல்லது இன்றைக்கு உலகில் யாரும் பார்க்காத , அறியாத, உணராத ஒன்று, இருக்கிறது என்பதற்கு verifiable proof இல்லாத ஒன்று.
எனவே இல்லாத ஒன்றிலே என்ன ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனாலும் மனிதன் தான் நினைத்தபடி வாழும் சுதந்திரனாக இல்லாமல் இருப்பதால், கஷ்டம் வரும் போது கடவுள் வந்து தன்னைக் காப்பார் – சிறு வயதில் அன்னை உதவிக்கு வருவது போல என கருதிக் கொள்கிறான்.
இந்த நிலையில் தான் சார்ந்துள்ள மதத்தில் சொல்லப் பட்டுள்ள கடவுள் கோட்பாடு உண்மையானது என நம்புகிறான்.
மதங்களோ ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையான கோட்பாட்டை சொல்லுகின்றன. சரி, ஏதாவது ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு அமைதியாக வழிபட்டுக் கொள்ளுங்கள் என்றால் அப்படி இருப்பதில்லை. நான் சொல்லுற கோட்பாடுதான் சரி என்கின்றனர். அதை மாத்தி சொல்லாதே, கடவுளை இழிவு படுத்தாதே … என்று சொல்ல ஆரம்பித்து, சர்ச்சையில் துவங்கி பெரிய ஆயதங்களுடன் சண்டையில் கொண்டு போய் விடுகிறது.
ஒரு சாரார் கடவுள் நிகரற்றவர், அவர் மனிதனாக வந்தார் என்றால் அவரை சுருக்கி பலகீனப் படுத்தியது போல ஆகும் என்கிறார்.
இன்னொரு சாரார் கடவுள் எல்லையற்றவராக எல்லா இடத்திலும் வூடுருவி, எல்லாவற்றையும் தனக்குளே வைத்திருப்பவராக இருக்கிறார், அவரே மனிதனாகவும் அவதாரம் எடுககிறார் என்கின்றனர்.
சரி மனிதனாக அவதாரம் எடுக்கிறார், அப்ப ( as example) ஐயப்பனாக சுருங்கி விடுகிறாரே, அவ்வளவு பெரிய கடவுள் ஒரு சிறிய மனிதனாகி சுருங்கி விட்டது போலக் காட்டுவது, கடவுளை சுருக்குவது போல மனசுக்கு வருத்தமாக இருப்பதாக பீலிங்ஸ் ஏற்பட்டு வருத்தப் படுகின்றனர்.
இது கடவுளை சுருக்குவது போல ஆகாது, மனிதனுக்கு உதவி செய்ய இன்னொரு மனிதனாக வந்தால் தவறில்லை. மேலே உட்கார்ந்து கொண்டு கீழே நடப்பதை வேடிக்கை பார்ப்பது அருளாளனுக்கு உரிய தன்மையா, இறங்கி வந்து உதவுவதுதானே கருணையை காட்டும் செயல் என்கின்றனர்.
“அடப் போயா , கடவுள் மனுசனா பொறந்தா மல ஜலம் எல்லாம் கழிக்கணும், அதெல்லாம் அசிங்கம்யா , மலம் அசுத்தமான நாற்றமெடுத்தது , அத போயி கடவுளோட சம்பந்தப் படுத்த முடியுமா? “
“மலம் என்பது செரிக்கப் பட்ட உணவின் சக்கை, அதை உடல் வெளி ஏற்றுகிறது .மனிதனோடு வாழ்ந்து அவனுடைய கஷ்டத்துக்கு உதவ தான மனுசனாவே வராரு, மல ஜலம் கழிச்சா தப்பா?”
“சொன்னா உனக்கு புரியுதா, மனுஷன் மாறியே கல்யாணம் பண்ணி… உடல் உறவு கொள்வது… இதெல்லாம் அசிங்கமா இல்லை?”
“கடவுள் மனுசனா பொறந்து ஒரு மனிதப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி உடல் உறவு கொண்டால் அதில் என்னய்யா தவறு? இன்னொருத்தன் பொண்டாட்டியோடு உடல் உறவு கொண்டால் தான் தவறு. எதுயா அசிங்கம் , நீ நான் சொல்ற படி செஞ்சுட்டு மேலே வா, உனக்கு இதை தாரேன், அதை தாரேன், என்று சொல்லுவதாக கோட்பாடு வைப்பது அசிங்கம் இல்லை , ஒரு பொண்ணை வூரரிய , உறவறிய தொட்டுத் தாலி காட்டி அவளோடு குடும்பம் அடத்தி அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது அசிங்கமா?”
இப்படியாக யாருமே பார்க்காத கடவுளின் பெருமையைக் காப்பற்ற நடத்தப் படும் விவாதங்கள் சூடாகின்றன. இவர்களின் இந்த விவாதங்களைக் கேட்டு சூடாகிப் போன சிலர் இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் என்று கத்தி கம்பு, வாளை ஓங்கி இரத்த ஆறை ஓட விடுகின்றனர்.
இதெல்லாம் தேவையா? நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே, நம்பிக்கை என்பது உண்மை ஆக இருக்கும் என்று அவசியம் இல்லை. உண்மை என்றால் எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஏதோ ஒரு கடவுள் கோட்பாட்டை வைத்துக் கொண்டு , அமைதியாக வழி பட்டு விட்டு சென்றால் பரவாயில்லை. வழிபாடு முடிந்தவுடன் மனதிலே பொறுமையும், நிதானமும் , சிநேகமும், சகிப்புத் தன்மையும் , இணக்கமும், சாந்தமும் … உருவாகுமானால் அது நல்லது. ஆனால் கடவுள் கோட்பாடுகள் சிநேகத்தை சகிப்புத் தன்மையை, சாந்தத்தை … எல்லாம் உருவாக்காமல் மோதலை, அடாவடியை, கட்டாயப் படுத்துதலை… இவை போன்றவற்றை உருவாக்குகின்றன என்றால் இதெல்லாம் நல்லாவா இருக்கு பாஸ்? இதனால் தான் கடவுளை மற மனிதனை நினை என்றனர் சார்வாகர், புத்தர், விவேகானந்தர், பெரியார்… போன்றவர்கள்.
/இதெல்லாம் தேவையா? நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே, நம்பிக்கை என்பது உண்மை ஆக இருக்கும் என்று அவசியம் இல்லை. /
ReplyDeleteஅருமை நண்பரே,
மதம் உண்மையா என்பதை விட ,அம்மதத்தவரின் மனிதப் பண்பு மேம்படுத்தலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இதனை விட்டு விட்டு என் மதம் மட்டுமே சரி,இதோ பார் சான்று,இதில் அறிவியல் இருக்கிறது,அதனை விவாதித்து உறுதிப் படுத்துவேன் என்பது சரியல்ல.இந்த மத பெருமிதம் பதிவுலகில் மிக பெரிய தொல்லையாகி வருகிறது.
நன்றி
நணபரே. உங்கள் பதிவுகள் தெளிந்த நீரோடையைப் போல் இருக்கின்றது. கடவுள், நம்பிக்கை என்பது பாமர மக்கள் புரிந்த அளவுக்கு....மற்றவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை.
ReplyDelete//இப்படியாக யாருமே பார்க்காத கடவுளின் பெருமையைக் காப்பற்ற நடத்தப் படும் விவாதங்கள் சூடாகின்றன. இவர்களின் இந்த விவாதங்களைக் கேட்டு சூடாகிப் போன சிலர் இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் என்று கத்தி கம்பு, வாளை ஓங்கி இரத்த ஆறை ஓட விடுகின்றனர்.//
நன்றாக சொன்னீர்கள்
Dear Brother Naren,
ReplyDeleteThanks. Please visit again and keep posting your valuable comments.