Wednesday, July 6, 2011

அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

ஏழைகளிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலங்களையும் பண்ணையார்களும், மாவட்ட செயளால , வட்ட செயளால அரசியல் வாதிகளும் மிரட்டி, உருட்டி பறித்துக் கொண்டு அவர்களை நிர்க்கதி ஆக்குவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இப்படி கட்டப் பஞ்சாயத்தினால் பறிக்கப் பட்ட நிலம் போக மிச்சம் ஏதாவது நிலம் பாக்கி இருந்தால் அதையும் விடாமல் அரசாங்கமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி “சட்ட பூர்வமாக” அடிமாட்டு விலைக்கும் கீழே கொடுத்து, அந்த நிலங்களைப் பிடுங்கி அதை பிரைவேட்டு பில்டர்களின் கையில் கொடுத்து அழகு பார்க்கறது.


அந்த பிரைவேட்டு பில்டர் அதில் நாற்பது மாடி , அறுபது மாடி பிளாட் போட்டு விற்று கோடிகளைக் குவிக்கிறான்.

இதே கைங்கர்யத்தை உ.பி. அரசு காண கச்சிதமாக செய்து, நோய்டா பகுதியில் 156 ஹெக்டேர் நிலத்தை ஏழைகளிடம் இருந்து பிடுங்கி பிரைவேட் பில்டர்களிடம் கொடுத்தது.


அதிகாரம் உள்ளோர் பிரித்துக் கொண்டோர்,
அப்பாவிகள் தெருவில் நின்றார் ,
சிலர் வாழ வாழ
பலர் தாழ தாழ
ஒரு போதும் உச்ச நீதி மன்றம் கொடுத்தில்லை


என்று வாழ்த்து படும் படி , ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் படியான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது.எல்லா நிலத்தையும் விவாசிகளிடம் திருப்பிக் கொடு என்று சொல்லி உயர் நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்து விட்டது.


ஜஸ்டிஸ் சிங்வி அவர்கள், ”விவாசாயிகளுக்கு தாய் , வாழ்வாதாரம், சோறு எல்லாமே நிலம் தானே. நீங்கள் பொது நலம் என்ற போர்வையில் முதலாளிகள் கொழுக்க வகைசெய்து கொடுக்கிறீர்கள்” என்று கொதித்து எழுந்து விட்டார்.

நீதி அரசர்களே, நீங்கள் நீடூழி வாழ்க, இந்த நாட்டில் நீதி உயிரோடு உள்ளது என்பதைக் காட்டி உள்ளீர்கள்.

Title:அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

3 comments:

  1. நண்பரே, பாராட்டுக்கள், நாட்டின் தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு முக்கியமான செய்தியை கூர்ந்து பதிவிட்டுள்ளீர்கள்.

    இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒரு obnoxious சட்டம் என்பதை நேரம்மிருந்தால் நான் பதிவிடுகின்றேன்.

    125 வருட கால சட்டத்தில் கண் மூடி முன்னே சென்று இப்பொழுதுதான் நீதிமன்றம் கொஞசம் நின்று இருக்கிறது. இன்னும் பின்னோக்கி சென்று சரி செய்ய வேண்டியது நிறைய இருக்கின்றது.

    ஆனால் இந்த தீர்ப்பை வைத்து சந்தோசப்படவதற்கு ஒன்றும் இல்லை. இந்த தீர்ப்பின் சாரம்சம் அரசு சட்டப்படி நடக்கவில்லை என்பது தான். சட்டப்படி நடந்து ஏழைகளின் சொத்தை பணக்காரர்களுகு தாரை வார்க்கலாம்.

    ReplyDelete
  2. வருக்கைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி , நரேன்.

    ReplyDelete
  3. தேவையான பதிவு சகோ,
    பாராட்டுகள்

    ReplyDelete