“அஸ்ஸலாமு அலைகும்” என்றால் “உங்களிடம் அமைதி நிலவட்டும் (peace be upon you) ” என்று அர்த்தம் ஆகும்.
ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளுள் சிறப்பானது மன அமைதி ஆகும். ஒரு மனிதனிடம் எவ்வளவு பணம், சொத்து, பதவி, அதிகாரம், செல்வாக்கு இருந்தாலும் அவற்றை விட அவனுக்கு நன்மை தருவது நோயற்ற உடலும், அமைதியான மனமுமே.
தமிழர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “வணக்கம்” என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோமோ அதே போல ”அஸ்ஸலாமு அலைகும் ” என்பது ஒருவர் இன்னொருவரை வாழ்த்தும் வாசகமாக உள்ளது. நான் ஒரு முறை லிப்டில் நுழைந்த போது அதே பில்டிங்கில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி செய்து வந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் அந்த லிப்டில் இருந்தார். அவரை நான் அவ்வப் போது லிப்டில் சந்தித்து இருக்கிறேன். அன்று அவரைக் கண்டவுடன் நான் அவரிடம் அஸ்ஸலாமு அலைகும் என்றேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வ அலைகும் ஸலாம் என்றார்.
“‘நீங்கள் சிறப்பான செயலை செய்கிறீர்கள். ஒருவரை ஒருவர் காண நேரிட்டால் முந்திக் கொண்டு ஸலாம்சொல்ல வேண்டும் என முகமது (ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம்) சொல்லி இருக்கிறார்” என்றார்.
இது பண்பாட்டை உருவாக்கும் செயல் ஆகும். இது மனிதாபிமானத்தையும் கட்டுகிறது. ஏதோ கவலையுடன், ஒரு செயல் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று தவிப்புடன் செல்வோரிடம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று வாழ்த்தினால் அவருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. நாம் ஏழையா இருக்கோமே, நம்மளை யாரும் மதிப்பது இல்லையே என்று நினைப்பவரிடம் அஸ்ஸலாம் அலைகும் என்றால், அட நம்மளையும் மதித்து முகமன் சொல்லுகிறாரே அவர் மனதில் புத்துணர்ச்சி உருவாகிறது.
தெருவில் செல்லும் போது ஒருவரை ஒருவர் காண நேர்ந்தால் முந்திக் கொண்டு சலாம் சொல்லுவது சிநேகத்தை வளர்ப்பதாகவும், ஈகோவை குறைப்பதாகவும் உள்ளது. அவன் முதல்ல சலாம் சொல்லட்டும் என்று இருவரும் இருந்தால், கடைசியில் இருவருமே முகமன் சொல்லாமல் சென்று விடுவார்கள். எனக்கு அவன் சலாம் சொல்லலை, பார்த்தும் பாக்காமா போயிட்டான் இல்லை, சரி கவனிச்சுக்கறேன் என்று கர்ரம் வைக்க அது காரணமாகி விடும்.
வெறுப்புணர்ச்சியும், வெறி உணர்ச்சியும், கோவமும் , குரோதமும், ஆசையும் , தாபமும் கொழுந்து விட்டெரியும் மனதில் அமைதி உருவாகாது.
வெறுப்புணர்ச்சி, வெறி உணர்ச்சி , கோவம், குரோதம்… இவை எல்லாம் நீக்கிய மனதிலேயே அமைதி உருவாகும்.
நாம் எந்த அளவுக்கு ஆசைகளை விடுகிறோமோ, அந்த அளவுக்கு நம் மனதில் அமைதி நிலவும்.
நாம் எந்த அளவுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசை, தாபம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அமைதி நீங்கி மனம் பொங்கித் தவிக்கிறது.
அன்பும், சினேக மனப்பான்மையும்., கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் மனதிலே அமைதியை உருவாக்குகிறது.
நம் அனைவரின் மனதிலும் அமைதி நிலவட்டும்.
அஸ்ஸலாமு அலைகும்!
அஸ்ஸலாமு அலைகும்!
ReplyDeleteவ அலைக்கும் சலாம் சார்வாகன் அவர்களே.
ReplyDeleteஇதுவே இந்தியர்களின், தமிழர்களின் சிறப்பு.
பிற மொழிகளை , மதங்களை, இனங்களை வெறுக்காமல் சகஜமாக அனுசரித்து கலந்து பழகுதலே நமது பண்பாடு. இந்தப் பண்பாடே மனிதத்தைக் காக்க கூடியது. இதை அனைவரிடமும் பரப்புவோம்.
நாம் சலாம் அலைக்கும் சொல்லி ஈத் பண்டிகையில் கலந்து கொள்வோம். மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்துமஸ் பண்டிகையில் கலந்து கொள்வோம். பொங்கலோ பொங்கல் சொல்லி பொங்கல் பண்டிகையும் கொண்டாடுவோம். எந்தக் கடவுளையும், எந்த வழிபாட்டு முறையையும் நாம் இகழவோ திட்டவோ இல்லை.
அதே நேரம் கடவுள் இருக்கிறாரா என்கிற ஆராய்ச்சியில் உண்மையை அறியும் முயற்சியை கை விடவும் இல்லை, கடவுள் என்ற ஒருவர் இருப்பதை யாரும் நிரூபித்துக் காட்டவில்லை என்பதை சொல்லவும் தயங்குவதில்லை.
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி சார்வாகன்.
நணப்ரே. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒரு சக மனிதனைப் பார்த்தால் அவனை வாழ்த்துவதற்கும் அழைப்பதற்கும் வாக்கியங்கள் இருக்கின்றன.
ReplyDeleteஇஸ்லாமிய இறை கொள்கைப் படி ஒரு மனிதனை வணங்க கூடாது என்பதால் வணக்கம் என்ற சொல்லை தவிர்த்து அருமையான சொல்லான ”அஸ்ஸலாமு அலைகும்” என்று வாழ்த்துகிறார்கள்.
ஆனால் இந்த வாழ்த்தானது ஒரு இஸ்லாமியர் இஸ்லாமியர் அல்லாதோருக்கு சொல்லக்கூடாது என்கிறார்கள். அதனால் இந்த வாழ்த்தை இஸ்லாம், இஸ்லாமல்லாத ஒருவருக்கு ஒருவர் அல்லாமல் அவர்களுக்குள்ளாவே சொல்லிக்கொள்ளலாம்
சகோ இதைத்தானே சொல்கிறோம்,
ReplyDeleteநான் உன்னை,கொள்கையை மதிக்கிறேன்,நீயும் என்னையும்,கொள்கையையும் மதி என்றால் என்ன சொல்கிறார்கள்?
நீ என்னையும் ,என் கொள்கையையும் மதிப்பது அது உயர்வானது என்று தெரிவதால் எனக்கு அப்ப்டி தோனவில்லை ஆகவே இதுதான் சரி வந்துவிடு என்கிறார்கள்.
Brothers Naren & Sarvakan,
ReplyDeleteMany thanks for your participation. Your points deserves attention and deliberation.