Thursday, December 23, 2010

பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.

பூணூல் அணிவது இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் ஆகும்.   இலக்கியங்களில் பூணூல் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பூணூலை பலரும் அணிகிறார்கள். ஆனால் பூணூல் என்பது பிராமணர்கள் என சொல்லப்படுபவர் மாத்திரம் அணியும் ஒன்றாக பலரும் நினைக்கிறார்கள். தமிழ் நாட்டில் செட்டியார்,  ஆச்சாரி (தச்சர்,  கொல்லர்) என சொல்லப்படுபவர்களும் பூணூல் அணிகின்றனர்.  வட இந்தியாவில் பலர் பூணூல் அணிகின்றனர்.

இந்த பூணூல் அணிவது ஏன், அதன் உபயோகம் என்ன? எல்லோரும் பூணூல் அணிவது எப்படி சமத்துவத்துக்கு உதவும்    இவற்றை பற்றி நாம் விரிவாக ஆராய்வோம்.

பூணூல் என்பது ஆன்மீக முன்னேற்றம், மனக் கட்டுப்பாடு, ஒழுக்கம்  ஆகியவற்றை நினைவு படுத்தும் சின்னமாக அணியப் படுகிறது.
பூணூலை மார்பின் குறுக்காக அணிகின்றனர். உடலோடு ஒட்டிய ஒன்றாக பூணூல் இருக்கிறது.  பூணூல்  அணிந்தால் தான் மனக் கட்டுபாடா என்றால், பூணூல் அணியாமலும் மனக் கட்டுப்பாட்டுடன் பலர் இருக்கின்றனர். இந்து மதத்திலே துறவிகள் பூணூல்  அணிவது இல்லை. எனவே பூணூல் தங்களுக்கு நியமத்தை உணர்த்துகிறது என்று கருதுபவர்கள் பூணூலை அணிந்து கொள்ளாலாம். அவசியம் விருப்பம் இருப்பவர்கள் அணியலாம். விருப்பம், அவசியம்  இல்லாதவர்கள் அணிய வேண்டியதில்லை.

பூணூல் எவ்வாறு சமத்துவத்துக்கு உதவும்?


  ”பூணூல் அணிபவர்கள் என்றால் பிராமண சமுதாயம் என சொல்லப் படுபவர்கள் மட்டும் தான் அணிய முடியும் என்கிறார்களே’” என்று தமிழ் நாட்டில் பலரும் நினைக்கிறார்கள்.
‘”அவர்கள மட்டும் தான் பூணூலை அணிய முடியும், அது சாதீய அடையாளமாக இருக்கிறது, உயர் சாதி என்பதைக் காட்டும் விதமாக பூணூல்
போட்டுக் கொள்கிறார்கள்” என்று சிலர் கருதுகின்றனர்.

அப்படியானால் எல்லோரும் ஏன் பூணூல்  போட்டுக் கொள்ள கூடாது,  எல்லோருமே ஒரே சாதிதான், சமத்துவம்  என்று ஆகுமே! அவன் பூணூல் போட்டுக் கொள்கிறானே என்றால், நீங்களும் பூணூல்  போட்டுக் கொள்ளுங்கள் அப்போது வேறுபாடு எப்படி வரும்?

 பூணூலை அணிந்து கொள்வது மிக எளிதான விடயம். 
 ரங்கநாதன் தெரு, மாம்பலம் ரயில் நிலையம் அருகில் பத்து ரூபாய்க்கு பூணூல் கிடைக்கும். பூணூலை போட்டுக் கொள்ளும் போது அவர்கள் சொல்லும் மந்திரங்கள் கேசட்டாக கிடைக்கிறது. அந்த மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன என்பது பற்றிய புத்தகங்கள்  கிடைக்கிறது. புரோகிதர் கூட தேவை இல்லை. மந்திரங்களின் அர்த்தம் என்ன என்பதை படித்து பார்க்கலாம். அவற்றால ஆன்மீக முன்னேற்றம், அறிவு தேடல் கிடைக்கும் என்றால் அந்த மந்திரங்களை கேட்டுக் கொண்டே பூணூலை போட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்!


 வெற்று மார்பிலே பூணூலை போட்டுக் கொண்டு, வேஷ்டி துண்டுடன் கோவிலுக்கு சொல்லுங்கள், தெருவிலே அங்கும் இங்கும்  செல்லுங்கள், யாரும் நம்மை தடுக்க முடியாது. எல்லோரும் ஒன்றுதான் , சமத்துவம் தான்.


இது சமத்துவத்தின் ஆரம்பமே, முழுமையான சமத்துவம், நாம் அனைவரும் நாகரிக மனிதராக, பிறருக்கு தொல்லை கொடுக்காமல் , பிறரை மதிக்கும் பண்புள்ளவராக முன்னேறும் போதுதான். அதற்கும் பூணூல் அணிவது உதவியாக இருக்குமா என்பது பற்றி பற்றி, பூணூலை அணிந்து கொண்டு செய்யப்படும் நியமங்கள் பற்றி, அவை நாகரிக முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்குமா என்பது பற்றி எல்லாம் தொடர்ந்து ஆராய்வோம்.

(தொடரும்)

Title: பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.

No comments:

Post a Comment