வரலாற்றை அறிவியல் போலத் திண்ணமாக கணிக்க இயலாது. வரலாறு என்பது அந்தந்த கால கட்டத்தில் எழுதப் பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகள் ஆகியவற்றின் மூலம் வூகிக்கப் பட்டு எழுதப் படுவதே.

இந்திய வரலாறு மிக தொன்மையானது. இந்திய வரலாற்றை புத்தருக்கு முன் புத்தருக்கு பின் எனப் பிரிக்கலாம். ஏனெனில் புத்தரின் காலம் கி.மு 563 ஆகும். ஏனெனில் அலக்சாண்டர் இந்தியாவின் மேல் படை எடுத்த காலம் கி.மு. 326 ஆகும். புத்தருக்கு பின் ஏறக் குறைய 150 வருடங்களுக்குப் பின். புத்தருக்கு பிந்தைய வரலாறு மேலை நாட்டினரால் பதிவு செய்யப் பட்டு இருக்கிறது. புத்தருக்கு முந்தைய வரலாற்றை நாம் எண்ணிப் பார்க்கிறோம்.
புத்தருக்கு முந்தைய கால கட்டத்திலே இந்திய சமுதாயம் பண்பாட்டிலும் , நாகரீகத்திலும் வளர்ச்சி அடைந்து செல்வச் செழிப்பு உள்ள நாடாகவே இருந்திருக்கிறது. சிந்து, கங்கை முதல் காவிரி வரை பல நதிகள் இந்தியாவில் வளமைக்கு உதவியுள்ளன.
இப்போது நாம் காணும் இராமாயணம் பண்டைய இந்தியாவில் நடை பெற்ற வரலாற்று நிகழ்வா என்பதே நம்முடைய ஆராய்ச்சிப் பொருள்.
இராமாயணமும், அதற்குப் பிறகு எழுதப் பட்ட மகாபாரதமும் புனைவு என்று சொல்லி விடுவது
எளிதான விடயம். நடந்து இருக்கக் கூடுமா என்பதே ஆய்வு.
இராமாயணம் வரலாற்று நிகழ்வாக இருந்திருக்க கூடும் என்பதற்க்கான வாய்ப்புகள் என்ன?
இராமாயண கால கட்டத்திலேயே எழுதப் பட்டதாகக் சொல்லப் படும் வால்மீகி இராமயணம் ஒரு நூல் ஆதாரமாக உள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாலம் போன்ற பகுதியானது இராமயணத்தில் சொல்லப் பட்ட பாலமாக இருக்கக் கூடுமா என்பது ஆராயப் பட வேண்டிய ஒன்று. இது பற்றி அகழ்வாராய்ச்சி செய்யப் பட வேண்டும் என்று நீதி மன்றங்கள் சொல்லி உள்ளன. ஆனால் அரசாங்கம் அதை ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை.
இராமயணத்தில் சொல்லப் பட்டுள்ள நிகழ்வுகள் பலவும் இயற்கயான நிகழ்வுகளாகவே உள்ளன. இராமன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். எந்த ஒரு அதிசத்தையும் இராமன் நிகழ்த்தியதாக இல்லை. கடலை இரண்டாகப் பிளந்து நடுவிலே நடந்து செல்வது போன்ற அதிசய நிகழ்வுகள் எதுவும் இல்லை. கடலைக் கடக்க பாலம் அமைத்து சென்றதாக உள்ளது.
இராமயணத்தின் முக்கிய அம்சமான வானரங்கள் என சொல்லப் படுபவை குரங்கில் இருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையும் கட்டத்திலே இடைப் பட்ட கட்டமாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

மொத்தத்திலே இராமயணம் ஒரு புனைவாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன, இராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்வாக இருக்க அதை விட வலுவான வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment