குரு இருந்தால் நல்லதுதான். தகுதியான குரு கிடைக்கும் போது அவரை விட்டு விட்டு செல்வது , பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர் பானையை உடைத்தது போலாகும்!
ஆனால் குரு என்ற ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என்பது இல்லை. தீவிரமான வைராக்கியம் உள்ள யாரும் அப்படியே சந்நியாசி ஆக விடுவான், இந்த உலகப் பொருட்கள் , சொத்து, சுகம் உட்பட எதுவும் தன்னைக் காக்க வராது, காக்கவும் அவற்றால் முடியாது என்பதை திண்ணமாக மனதில் பதிந்தவனுக்கு அப்போதே சன்யாசம் தான்.
குரு சன்யாசம் குடுத்தாலும், வாழ்க்கையின் கூறுகளை ஆராயாதவன் சந்நியாசி ஆனாலும் மறுபடியும் ஆசை வலையில் விழுந்து விடுவான்.
விவேகத்தினால ஏற்பட்ட வைராக்கியம்- அறிவினால் உண்டான மன உறுதிதான் ஒருவனை சன்யாசி ஆக மாற்றுகிறது.
சகஸ்ர நாமம் கற்றுக் கொள்ள கூட குரு வேண்டும் என்றால், உபநயனத்தின் போது குரு சொல்லி, தந்தை காயத்ரி மந்திரத்தை சொல்கிறார். குருவும் அந்த மந்திரத்துக்கு அர்த்தம் சொல்வது இல்லை. தந்தையும் சொல்வது இல்லை. குரு தக்ஷினையை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார். காயத்ரி மந்திரத்துக்கான அர்த்தத்தை புத்தகத்தைப் பார்த்துதான் பலரும் அறிந்து கொள்கின்றனர்.
மனதிலே உண்மையை தெரியச் செய்யும் ஒளியை வேண்டி, அந்த ஒளிதான் முக்கியமானது என்று அதைத் தவிர வேறு எதையும் எண்ணாமல் காயத்ரி மந்திரத்தை மனக் குவிப்புடன் சொன்னாலேதான் ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமாகும். வெறுமனே அர்த்தம் தெரியாமல் , 'குரு' சொன்னது போல மந்திரத்தை ஒப்பித்து விட்டு போனால் பலன் கிடைக்குமா? இதைத்தான் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரனே என்றார் .
குரு குரு என்று ஓவர் ஹைப் குடுப்பதால் கார்ப்பரேட் குருமார்கள் என்று சொல்லப் படுபவர்க்ளுக்குத் தான் லாபம், அதோடு அவர்களை சுற்றி சுற்றி வந்து சேவை செய்யும் முக்கியஸ்தர்களுக்கும் கொஞ்சம் லாபம் கிடைக்கும். - நஷ்டம், இந்து மதத்திற்குத் தான்.
குரு பக்தி என்ற பெயரிலே "குரு இருந்தால்தான்" என்று குருவுக்கு ஹைப் குடுப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைக் காப்பதே பெரும்பாடாக உள்ளது.
கடந்த முப்பது நாற்பது வருடத்தில் இப்படி குரு ஹைப் குடுத்தே பில்லியநேர் குருக்களையும் உருவாக்கி இந்து மதத்தை பின்னடைவு அடைய வைத்து விட்டனர்.
அப்பாவி பாமர மக்களின் அமைதியான கடவுள் பக்தியே இப்போது இந்து மதத்தைக் காத்து நிற்கிறது.
நல்ல குரு இருந்தால் வரட்டும். இல்லையேல் குரு இல்லாமலே இருக்கலாம்.
ஆதி சங்கரர் , இராமானுஜர், மத்வர் இவர்கள் காலத்துக்கு அப்புறம் எந்த குரு வந்து மக்களை வழி நடத்தினார்கள்? மக்களுக்கு எந்த குருவையும் தெரியாது.
புத்த மதத்தால் அப்புறப் படுத்தப் பட்ட கடவுள்களை ஆதி சங்கரர் மீட்டுக் கொடுத்து எல்லோரும் வழி பட செய்தார். அதை வைத்தே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இன்னும் பல்லாயிரம் வருடம் அப்படியே நடக்கும்.
சுவாமி விவேகானந்தர் வந்து மேலை நாட்டினருக்கு இந்து மதம் ஒரு சிறப்பான மதம் என்பதை அறியச் செய்து, இந்து மதத்தின் மீது போடப்பட்ட குப்பைகளை நீக்கி, மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார்.
அது போல நல்ல குருக்கள் வருவதானால் வரட்டும். இல்லையானால் யாரும் வேண்டாம், மக்களே பார்த்துக் கொள்வார்கள்.
குரு துதி பாடி ஹைப் குடுத்து பேரையும் புகழையும் உருவாக்கி கீழே விழும்போது பாதிப்பு இந்து மதத்திற்கு தான்.
மரியாதைக்குரிய குரு பக்த சிரோன்மணிகளே, நீங்கள் இந்து மதத்திற்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு குரு அவசியம் என நினைத்து, இப்படி அவ்வப் போது யாரையோ பிரபலமான குருவாக்கி இந்து மதத்தைக் காயப் படுத்தாமல் இருந்தால் போதும். இந்து மதம் அதன் பாட்டிலேயே சிறப்பாக செல்லும்.
No comments:
Post a Comment