Saturday, August 20, 2011

டக்.... டக்..... நாங்க டெல்லி போலீஸ், கதவைத் திறங்க!

//சார் , இந்த ஆளு எந்த லஞ்சமும் வாங்காத பஞ்ச பரதேசியா இருக்கானே, காலங்கார்த்தாலே இவன் மூஞ்சில முழிக்க வைச்சுட்டீங்களே, எனக்கு இன்னிக்கு எந்த கலெக்சனும் இல்லாம போயிடும் போல இருக்கே!//
காட்சி 1:

(நாடக அங்கத்தினர்கள்: குடும்பத் தலைவர் சின்னசாமி , குடும்பத் தலைவி பரிமளம், டி.எஸ்.பி. தினேஷ்,கான்ஸ்டபிள் கண்ணையா 402 )


டக்…. டக்…..

சின்னசாமி : பரிமளம், யாரு கதவைத் தட்டுறாங்கனு பாரு !

பரிமளம்(கதவின் வியூ பைண்டர் வழியாக வெளியே பார்த்தபடி) : யாரோ காக்கி சட்டை போட்டுக்கிட்டு நிக்கிறாங்க!

சின்னசாமி : இந்த வாட்ச் மேன் காலங்கார்த்தாலே எதுக்கு வந்து கதவை தட்டுறான் ? சரி கதவைத் திற!

(பரிமளம் கதவைத் திறக்கிறார். போலீசார் இருவர் வீட்டுக்கு உள்ளே வருகின்றனர்.)
குட்மார்னிங் மிஸ்டர் சின்னசாமி! நான் டி.எஸ்.பி. ஷியாம், இவர் கான்ஸ்டபில் கண்ணையா, வீ ஆர் பிரம் டில்லி போலீஸ்!

சின்னசாமி : அப்படியா, வாங்க உட்காருங்க, பரிமளம் அந்த பேனைப் போடு, சார் என்ன விசயமா வந்திருக்கீங்க?

டி.எஸ்.பி. தினேஷ்: உங்க கிட்ட விசாரணை நடத்த வந்திருக்கோம்!

சின்னசாமி (அதிர்ச்சியுடன்) : விசாரணையா, சார் நான் டி.வி.யில வானிலை அறிக்கை வாசிக்கிறவன், எங்க டிபார்ட்மென்ட்ல அஞ்சு பைசா கூட லஞ்சம் கிடைக்காதுங்க. என் வீட்டை வேணா நல்லா சோதனை போட்டுக்கங்க. பேங்கில ஹவ்சிங் லோன், ஆபீஸ்ல பி.எப். லோன்னு கழுத்தை சுத்தி கடன் இருக்கு சார்.

கான்ஸ்டபிள் கண்ணையா (டி. எஸ்.பி காதருகில் மெதுவான குரலில்) : சார், இந்த ஆளு எந்த லஞ்சமும் வாங்காத பஞ்ச பரதேசியா இருக்கானே, காலங்கார்த்தாலே இவன் மூஞ்சில முழிக்க வைச்சுட்டீங்களே, எனக்கு இன்னிக்கு எந்த கலெக்சனும் இல்லாம போயிடும் போல இருக்கே!

டி.எஸ்.பி. தினேஷ் :அட நீ கொஞ்சம் சும்மா இருய்யா (என்று கண்ணையாவை அதட்டுகிறார் )!

டி.எஸ்.பி. தினேஷ் (சின்னசாமியிடம் ) : சரி இன்னிக்கு உங்க புரோகிராம் என்ன, இப்ப என்ன பண்ணப் போறீங்க?

சின்னசாமி : சார் இப்ப டி.வி. யில ரஜினி, குஸ்பு நடிச்ச பாண்டியன் படம் போடப் போறாங்க , அதைப் பார்க்கப் போறேன்…

டி.எஸ்.பி. தினேஷ் : யோவ் .. அந்தப் படம் சரியான மொக்க , அதையா பார்க்கப் போற…

சின்னசாமி : என்ன டி.எஸ்.பி. சார் இதை சொல்லவா நீங்க வந்தீங்க…

டி.எஸ்.பி. தினேஷ் :ஆ..ங் …. சரி நீங்க இப்ப வெளியிலே எங்கும் போகப் போறதில்லை சரிதானே…
சின்னசாமி : இன்னிக்கு முழுதும் எங்கயும் வெளியில் போகற ஐடியா இல்லை சார்…

டி.எஸ்.பி. தினேஷ்: இந்த பார்க்…

சின்னசாமி : இல்லை சார், எந்த பார்க்குக்கும் நான் போகும் உத்தேசம் இல்லைங்க…

டி.எஸ்.பி. தினேஷ் அப்படியா …. நல்லது.. நான் வரேன்…

இந்த நேரத்தில் டி.எஸ்.பி.யின் செல் போன் ஒலிக்கிறது .. எடுத்துப் பேசுகிறார்
எஸ் சார்… என்ன சார் ….ஒ.கே சார் . போனை ஆப் செய்கிறார்.

டி.எஸ்.பி. தினேஷ்: மிஸ்டர் சின்னசாமி, நீங்க காலையில என்ன சாப்பிட்டீங்க?

சின்னசாமி : சார் … உண்மையை சொல்லனும்னா … வீட்டில நேத்து சாயந்திரமே கேஸ் தீர்ந்து போச்சு… அதுனால காலையில் இருந்து ஒரு டீ கூட குடிக்கலை.

டி.எஸ்.பி. தினேஷ்: மிஸ்டர் சின்னசாமி, நீங்க எந்த வித அனுமதியும் இல்லாம உண்ணாவிரதம் இருக்கீங்க… அதுனால நான் உங்களை அரெஸ்ட் பண்றேன்…

சின்னசாமி : சார், என்ன சார் இது, பரிமளம் ஒரு பிடி அரிசியை கொண்டுவந்து என் வாயில் போடு, அப்ப உண்ணாவிரதம் இல்லைன்னு ஆயிடும்!

டி.எஸ்.பி. தினேஷ் :யூ மீன் வாய்க்கரிசி? டூ யூ பிளான் பார் சூசைட் ?

சின்னசாமி : சார் … சார் .. நான் எது சொன்னாலும் குற்றமா போகுதே, நான் சாதரணமான ஆளு சார்… என்னை விட்டுடுங்க…

டி.எஸ்.பி. தினேஷ் : மிஸ்டர் சின்னசாமி, நீங்க ஒரு டீ.வி. நாடகத்துல, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”, அப்படின்னு கத்தி இருக்கீங்க!

சின்னசாமி : அதுல என்ன சார் தப்பு!

டி.எஸ்.பி. தினேஷ் :அப்படி வாங்க, யோவ் 402, அந்த விலங்கை எடுத்து இவர் கையில மாட்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் பிரதமரையும் லோக் பால் மாசோதாவுக்குள் கொண்டு வரணும்னு சொல்றதுதானே உங்க அர்த்தம்?

சின்னசாமி : சார் நான் அந்த அர்த்தத்துல சொல்லலை !

டி.எஸ்.பி. தினேஷ் :அப்ப ஒரு வெள்ளை பேப்பரை எடுங்க. எடுத்து “பிரதமர், பிரதமரின் உறவுகாரங்க, பிரதமரின் நண்பர்கள், பிரதமரின் காரியதரிசி, பிரதமரின் டிரைவர், வெளிநாட்டில் வசிக்கும் உள்நாட்டு நண்பர்கள், வெளி நாட்டில் வசிக்கும் வெளி நாட்டு நண்பர்கள் …. ஆகியோருக்கு லோக்பால் மசோதா வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் , அதோடு இவர்கள் வூழலே செய்ய இயலாத கரை படியாத கரத்துக்கு சொந்தக் கார்கள் என்று லோக்பால் அமைப்பு சான்றிதழும் தர வேண்டும்” என்று எழுதி உங்க கையெழுத்தை போட்டு தாங்க!

சின்னசாமி : சார் நான் எதுக்கு தான் இதை எல்லாம் எழுதி தரனும், எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!

டி.எஸ்.பி. தினேஷ் :அப்ப பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதி உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்கிறோம். உங்களை நீதிபதி முன்னால நிறுத்தப் போறோம், சட்டப் படி தான் எல்லா நடவடிக்கையும் எடுக்குறோம்.

சின்னசாமி : சார், சார் ஒண்ணுமே புரியலையே, நான் ஒரு தப்பும் பண்ணலை, என்னை விட்டுடுங்க!

கான்ஸ்டபிள் கண்ணையா :யோவ், நீ ஆளும் வர்க்கத்தோட ஒத்துப் போய் ஜால்ரா போடா தெரியாத கேனை , அதான் ஒன தப்பு… புரியுதா.. லந்து பண்ணாம ஜீப்புல ஏறு!

டி.எஸ்.பி. தினேஷ் ( ஜீப் கிளம்பு முன் வெளியே நின்ற பத்திர்க்கையாளரிடம் ): “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததர்க் காகவும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தடைக் கல்லாக இருந்ததற்காவும் திரு. சின்னசாமி யை கைது செய்கிறோம்” !
(திரை )

Tuesday, August 2, 2011

கடவுளை மற, மனிதனை நினை!

பெட்டியைப் பார்த்தவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்குவதா பகுத்தறிவுத்தனம்? குட்டியைப் பார்ந்தவுடன் குப்புற விழுவதா பகுத்தறிவின் இலட்சணம்?
உண்மையைத் தேடுவதே எனக்கு முக்கியம் என்று இருப்பவரே பகுத்தறிவுவாதி !

பகுத்தறிவுவாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான் உதரணமாக இருந்திருக்கிறார் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நசிகேதஸ்!

மனித வாழ்க்கையின் உண்மை என்ன என்பதை அறியும் பகுத்தறிவு ஆராய்ச்சியே இந்திய ஆன்மீகத்தின் அடிப்படை!

இந்திய ஆன்மீக ஆராய்ச்சியானது மனிதனின் வாழ்க்கையை ஆராய்ந்து அவனை துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலைக்கு அழைத்து செல்வதற்க்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. கடவுளை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்கிற தொனி அதில் உள்ளது!

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் (ஒரு பேச்சுக்கு as an assumption), அவர் எல்லாம் வல்லவராக இருக்காரு, அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றுதான் அவருடைய ஏஜென்ட்டுகள் எல்லோரும் சொல்லுகின்றனர்.

So பிரச்சினை எல்லாம் மனுசனுக்கு தான், அவனுக்கு என்ன பிரச்சினை என்று பார்த்து அவனுக்கு நிவாரணத்தை முதல்ல குடு. கஷ்டப்படரவனை முதல்ல கவனி என்கிறது இந்திய ஆன்மீகம்.

இந்திய ஆன்மீகத்தின் மிக முக்கிய நூல்களில் ஒன்றான கட உபநிடதத்தின் ஆராய்ச்சி எதைப் பற்றியது என்று பார்ப்போம்.

கட உபடநிடத்த்தில் நசிகேதஸ் எனும் இளவரசனுக்கு எமன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எமன் அவனுக்கு மூன்று வரங்களை அளிக்கிறான்.


நசிகேதஸ் எமனிடம்,

"இறந்த பிறகு என்ன ஆகிறது, சிலர் மனிதன் வாழ்க்கை முடிந்தது, அவன் உயிரும் இறந்தது என்கின்றனர். சிலர் உடல் இறந்தாலும் உயிர் இறப்பதில்லை என்கின்றனர்...இறந்த பின் உண்மையில் நடப்பது என்ன"

என்று கேட்கிறான் !

"Choose now, Nachiketas, the third gift."

"There is doubt concerning people who are deceased.
Some say they exist, and others say they do not exist.
Being taught by you, I would know this.
Of the gifts, this is the third gift."

எவ்வளவு சிறப்பான பகுத்தறிவு ஆராய்ச்சி பாருங்கள்.

இறந்த பிறகு மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறது என ஆத்தீகரைப் போல நசிகேதஸ் நம்பவும் இல்லை.

நாத்தீகரைப் போல உடலோடு உயிரும் இறந்து விடுகிறது என்று முடிவு கட்டவும் இல்லை.

மாறாக, உண்மை எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக, சரியான உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அணுகுகிறான்!

எவ்வளவு சிறப்பான நடுநிலையான பகுத்தறிவு நிலைப்பாடு பாருங்கள்!

"எந்தக் கடவுள் உண்மையான கடவுள் அண்ணே, எந்தக் கடவுளை கும்பிட்டா நாம சொர்க்கத்துக்கு போலாம், அதை சட்டு புட்டுன்னு சொல்லுங்க அண்ணே" என்று எப்படியாவது ஜஸ்ட் பாஸ் பண்ணினா போரும் என்று எண்ணுவது போல சிந்திக்கவில்லை நசிகேதஸ்.

இந்த எமனும் லேசுப்ப் பட்ட ஆளு இல்லை, "அதை எல்லாம் நீ ஏம்பா கேக்குற, ஒனக்கு பூமியில ஆட்சி செலுத்தும் அதிகாரம் வேணுமா, தங்கம், வைரம்வேணுமா, உனக்கு நீண்ட ஆயுளோடு கூடிய பசங்க, பேரப் பசங்க தரேன், மாடு மனை, யானைகள், தேர்கள், அழகான கன்னிகள் உனக்கு வேணுமா" என்று இலவசங்களை வாரி விடும் அரசியல்வாதியின் பாணியை உபயோகித்துப் பார்க்கிறான்.

"Even the gods of old had doubt as to this.
It is not easy to understand, so subtle is this law.
Choose another gift, Nachiketas.
Do not press me; release me from this one.""

Even the gods had doubt as to this,
and you, Death, say it is not easy to understand.
And another teacher of it like you is not to be found.
No other gift is comparable to this at all.

""Choose sons and grandsons who shall live a century,
many cattle, elephants, gold, and horses.
Choose a great estate of land
and live as many years as you want.
If you think this is an equal gift,
choose wealth and long life.
Nachiketas, be the ruler of a great country;
I will make you the enjoyer of your desires.
Whatever desires are hard to get in the mortal world,
request all those desires at your pleasure.
Here are lovely maidens with chariots and music;
these are not to be attained by anyone.
Be served by these whom I give you.

ஆனால் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய்க்கும் பால் மாறி ஓட்டுப் போடும் பேமானி நிலைப்பாட்டை நசிகேதஸ் எடுக்கவில்லை.

தோட்டம் தொரவு, காடு கழனி, மாடு மனை, தங்கம், வைரம் எதுவும் வேண்டாம் , இந்த டப்பா பிகருங்களை நீங்களே வச்சுக்கங்க, மனித வாழ்க்கை பற்றிய கேள்விக்கு பதிலை சொன்னா போரும் என்று சொல்லி அறிவைத் தேடுவதில் உறுதியான பகுத்தறிவாளனாக செயல் பட்டு இருக்கிறார் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நசிகேதஸ்!


Transient are the things of mortals, Ender,
wearing away all the vigor of their senses.
Even a full life is short.
Yours be the chariots; yours be the dance and song.

A person cannot be satisfied with wealth.
Shall we enjoy wealth when we have seen you?
Shall we live so long as you are in power?
This is the gift to be chosen by me.
Having approached undecaying immortality,
what decaying mortal on this earth below that understands,
that contemplates the pleasures of beauty and enjoyment,
would delight in an over-long life?

This about which they doubt, Death,
what there is in the great passing-on---tell us that.
This gift that penetrates the mystery,
no other than that does Nachiketas choose."

பகுத்தறிவுவாதி என்றால் இப்படி இருக்க வேண்டும்!

பெட்டியைப் பார்த்தவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்குவதா பகுத்தறிவுத்தனம்? குட்டியைப் பார்ந்தவுடன் குப்புற விழுவதா பகுத்தறிவின் இலட்சணம்?

இன்றைக்கு தம்மை ஆன்மீக வாதி என சொல்லிக் கொள்ளும் பலர்
கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து, எஸ்டேட் , பங்களா, எடுபுடி என வாழ்கின்றனர்,
குட்டிகளைப் பார்த்தவுடன் மல்லாந்து விடுகின்றனர்.

அப்படிப் பட்டவரை அணுகாமல், கண்ணியமும், கட்டுப்பாடும் உடைய பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கும் உண்மையான
ஆன்மீக வாதியான நசிகேதஸ் போன்றோரின் கருத்துக்களைப் படித்தாலே சிறப்பு.



கடவுளை பற்றி நசிகேதஸ் கவலைப் படவும் இல்லை, அடிபணியவும் இல்லை!

Thursday, July 14, 2011

"இப்படிப்பட்ட தாக்குதல்கள் இதற்கு மேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்...! "

அப்ப இது வரைக்கும் என்னய்யா செஞ்சீங்க,

பயங்கரவாதிக்கு பேவரிட் இடமாக மும்பை இருக்கிறது. சொல்லி வச்சது மாறி சவேரி பசாரில் மூன்றாவது முறையாக வெடித்து இருக்கிறான்.


டிராபிக் போலீஸ் , போதைப் பொருள் தடுப்பு போலீஸ் என்று இருப்பது போல பயங்கரவாத தடுப்பு போலீஸ் அமைப்பை உருவாக்கி மும்பையில் எல்லா இடங்களிலும் ஸ்டேசனை உருவாக்கி இருக்க வேண்டும். மும்பையில் சாலைகளில் வீடியோ காமெராக்களை அதிகமாகப் பொறுத்த வேண்டும். பிளாட்பாரத்தில் கடை வைத்து இன்பார்மர்கள் ஆக்கி புதிய நபர்கள் வரும் போது தகவல் குடுக்க சொல்லலாம்.


ஆனால் பொறுப்பில் இருப்போர் செய்வது என்ன? பயங்கரவாதி குண்டு வெடித்தவுடன் , இது முகமற்ற கோழைகளின் செயல், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சொல் ல வேண்டியது, பிளைட் பிடித்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துபார்வை இட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவோரை தடவிக் கொடுக்க வேண்டியது, மறுபடியும் பிளைட் பிட்த்து திரும்ப வேண்டியது – இதுதான் நடக்கிறது!

Wednesday, July 6, 2011

அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

ஏழைகளிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலங்களையும் பண்ணையார்களும், மாவட்ட செயளால , வட்ட செயளால அரசியல் வாதிகளும் மிரட்டி, உருட்டி பறித்துக் கொண்டு அவர்களை நிர்க்கதி ஆக்குவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இப்படி கட்டப் பஞ்சாயத்தினால் பறிக்கப் பட்ட நிலம் போக மிச்சம் ஏதாவது நிலம் பாக்கி இருந்தால் அதையும் விடாமல் அரசாங்கமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி “சட்ட பூர்வமாக” அடிமாட்டு விலைக்கும் கீழே கொடுத்து, அந்த நிலங்களைப் பிடுங்கி அதை பிரைவேட்டு பில்டர்களின் கையில் கொடுத்து அழகு பார்க்கறது.


அந்த பிரைவேட்டு பில்டர் அதில் நாற்பது மாடி , அறுபது மாடி பிளாட் போட்டு விற்று கோடிகளைக் குவிக்கிறான்.

இதே கைங்கர்யத்தை உ.பி. அரசு காண கச்சிதமாக செய்து, நோய்டா பகுதியில் 156 ஹெக்டேர் நிலத்தை ஏழைகளிடம் இருந்து பிடுங்கி பிரைவேட் பில்டர்களிடம் கொடுத்தது.


அதிகாரம் உள்ளோர் பிரித்துக் கொண்டோர்,
அப்பாவிகள் தெருவில் நின்றார் ,
சிலர் வாழ வாழ
பலர் தாழ தாழ
ஒரு போதும் உச்ச நீதி மன்றம் கொடுத்தில்லை


என்று வாழ்த்து படும் படி , ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் படியான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது.எல்லா நிலத்தையும் விவாசிகளிடம் திருப்பிக் கொடு என்று சொல்லி உயர் நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்து விட்டது.


ஜஸ்டிஸ் சிங்வி அவர்கள், ”விவாசாயிகளுக்கு தாய் , வாழ்வாதாரம், சோறு எல்லாமே நிலம் தானே. நீங்கள் பொது நலம் என்ற போர்வையில் முதலாளிகள் கொழுக்க வகைசெய்து கொடுக்கிறீர்கள்” என்று கொதித்து எழுந்து விட்டார்.

நீதி அரசர்களே, நீங்கள் நீடூழி வாழ்க, இந்த நாட்டில் நீதி உயிரோடு உள்ளது என்பதைக் காட்டி உள்ளீர்கள்.

Title:அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

Monday, July 4, 2011

அஸ்ஸலாமு அலைகும்!

“அஸ்ஸலாமு அலைகும்” என்றால் “உங்களிடம் அமைதி நிலவட்டும் (peace be upon you) ” என்று அர்த்தம் ஆகும்.

ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளுள் சிறப்பானது மன அமைதி ஆகும். ஒரு மனிதனிடம் எவ்வளவு பணம், சொத்து, பதவி, அதிகாரம், செல்வாக்கு இருந்தாலும் அவற்றை விட அவனுக்கு நன்மை தருவது நோயற்ற உடலும், அமைதியான மனமுமே.

தமிழர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “வணக்கம்” என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோமோ அதே போல ”அஸ்ஸலாமு அலைகும் ” என்பது ஒருவர் இன்னொருவரை வாழ்த்தும் வாசகமாக உள்ளது. நான் ஒரு முறை லிப்டில் நுழைந்த போது அதே பில்டிங்கில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி செய்து வந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் அந்த லிப்டில் இருந்தார். அவரை நான் அவ்வப் போது லிப்டில் சந்தித்து இருக்கிறேன். அன்று அவரைக் கண்டவுடன் நான் அவரிடம் அஸ்ஸலாமு அலைகும் என்றேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வ அலைகும் ஸலாம் என்றார்.


“‘நீங்கள் சிறப்பான செயலை செய்கிறீர்கள். ஒருவரை ஒருவர் காண நேரிட்டால் முந்திக் கொண்டு ஸலாம்சொல்ல வேண்டும் என முகமது (ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம்) சொல்லி இருக்கிறார்” என்றார்.

இது பண்பாட்டை உருவாக்கும் செயல் ஆகும். இது மனிதாபிமானத்தையும் கட்டுகிறது. ஏதோ கவலையுடன், ஒரு செயல் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று தவிப்புடன் செல்வோரிடம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று வாழ்த்தினால் அவருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. நாம் ஏழையா இருக்கோமே, நம்மளை யாரும் மதிப்பது இல்லையே என்று நினைப்பவரிடம் அஸ்ஸலாம் அலைகும் என்றால், அட நம்மளையும் மதித்து முகமன் சொல்லுகிறாரே அவர் மனதில் புத்துணர்ச்சி உருவாகிறது.

தெருவில் செல்லும் போது ஒருவரை ஒருவர் காண நேர்ந்தால் முந்திக் கொண்டு சலாம் சொல்லுவது சிநேகத்தை வளர்ப்பதாகவும், ஈகோவை குறைப்பதாகவும் உள்ளது. அவன் முதல்ல சலாம் சொல்லட்டும் என்று இருவரும் இருந்தால், கடைசியில் இருவருமே முகமன் சொல்லாமல் சென்று விடுவார்கள். எனக்கு அவன் சலாம் சொல்லலை, பார்த்தும் பாக்காமா போயிட்டான் இல்லை, சரி கவனிச்சுக்கறேன் என்று கர்ரம் வைக்க அது காரணமாகி விடும்.


வெறுப்புணர்ச்சியும், வெறி உணர்ச்சியும், கோவமும் , குரோதமும், ஆசையும் , தாபமும் கொழுந்து விட்டெரியும் மனதில் அமைதி உருவாகாது.


வெறுப்புணர்ச்சி, வெறி உணர்ச்சி , கோவம், குரோதம்… இவை எல்லாம் நீக்கிய மனதிலேயே அமைதி உருவாகும்.

நாம் எந்த அளவுக்கு ஆசைகளை விடுகிறோமோ, அந்த அளவுக்கு நம் மனதில் அமைதி நிலவும்.

நாம் எந்த அளவுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசை, தாபம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அமைதி நீங்கி மனம் பொங்கித் தவிக்கிறது.

அன்பும், சினேக மனப்பான்மையும்., கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் மனதிலே அமைதியை உருவாக்குகிறது.

நம் அனைவரின் மனதிலும் அமைதி நிலவட்டும்.

அஸ்ஸலாமு அலைகும்!

Saturday, July 2, 2011

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு ….

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு …. என்று சொல்லுபவர்களை பிடிவாதக்காரர்கள் என்கிறோம் அல்லவா,

பல முறை முயல்களை பிடித்து எத்தனை கால்கள் உள்ளன என்று அறியத் தர முடியும். ஆனாலும் பிடிவாதக்கார நண்பர் விடாமல் நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லி தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் செயல்படுவார்.

இதை எல்லாம் பார்க்கும் பொது மக்களும், பிடிவாதக்காரரின் சமாளிப்பு செயல் என்பதை புரிந்து கொள்வார்கள். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிற பிடிவாதத்தை விட ஆபத்தான பிடிவாதம் கடவுள் கோட்பாட்டு பிடிவாதம்.

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிறவர்களாவது இருக்கின்ற ஒரு விடயத்தை பிறர் காணக் கூடிய, உணரக் கூடிய விடயத்தை பற்றி சொல்லுகிறார்கள்.
ஆனால் இந்த கடவுள் என்பது இல்லாத ஒன்று அல்லது இன்றைக்கு உலகில் யாரும் பார்க்காத , அறியாத, உணராத ஒன்று, இருக்கிறது என்பதற்கு verifiable proof இல்லாத ஒன்று.
எனவே இல்லாத ஒன்றிலே என்ன ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனாலும் மனிதன் தான் நினைத்தபடி வாழும் சுதந்திரனாக இல்லாமல் இருப்பதால், கஷ்டம் வரும் போது கடவுள் வந்து தன்னைக் காப்பார் – சிறு வயதில் அன்னை உதவிக்கு வருவது போல என கருதிக் கொள்கிறான்.
இந்த நிலையில் தான் சார்ந்துள்ள மதத்தில் சொல்லப் பட்டுள்ள கடவுள் கோட்பாடு உண்மையானது என நம்புகிறான்.

மதங்களோ ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையான கோட்பாட்டை சொல்லுகின்றன. சரி, ஏதாவது ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு அமைதியாக வழிபட்டுக் கொள்ளுங்கள் என்றால் அப்படி இருப்பதில்லை. நான் சொல்லுற கோட்பாடுதான் சரி என்கின்றனர். அதை மாத்தி சொல்லாதே, கடவுளை இழிவு படுத்தாதே … என்று சொல்ல ஆரம்பித்து, சர்ச்சையில் துவங்கி பெரிய ஆயதங்களுடன் சண்டையில் கொண்டு போய் விடுகிறது.

ஒரு சாரார் கடவுள் நிகரற்றவர், அவர் மனிதனாக வந்தார் என்றால் அவரை சுருக்கி பலகீனப் படுத்தியது போல ஆகும் என்கிறார்.

இன்னொரு சாரார் கடவுள் எல்லையற்றவராக எல்லா இடத்திலும் வூடுருவி, எல்லாவற்றையும் தனக்குளே வைத்திருப்பவராக இருக்கிறார், அவரே மனிதனாகவும் அவதாரம் எடுககிறார் என்கின்றனர்.

சரி மனிதனாக அவதாரம் எடுக்கிறார், அப்ப ( as example) ஐயப்பனாக சுருங்கி விடுகிறாரே, அவ்வளவு பெரிய கடவுள் ஒரு சிறிய மனிதனாகி சுருங்கி விட்டது போலக் காட்டுவது, கடவுளை சுருக்குவது போல மனசுக்கு வருத்தமாக இருப்பதாக பீலிங்ஸ் ஏற்பட்டு வருத்தப் படுகின்றனர்.


இது கடவுளை சுருக்குவது போல ஆகாது, மனிதனுக்கு உதவி செய்ய இன்னொரு மனிதனாக வந்தால் தவறில்லை. மேலே உட்கார்ந்து கொண்டு கீழே நடப்பதை வேடிக்கை பார்ப்பது அருளாளனுக்கு உரிய தன்மையா, இறங்கி வந்து உதவுவதுதானே கருணையை காட்டும் செயல் என்கின்றனர்.

“அடப் போயா , கடவுள் மனுசனா பொறந்தா மல ஜலம் எல்லாம் கழிக்கணும், அதெல்லாம் அசிங்கம்யா , மலம் அசுத்தமான நாற்றமெடுத்தது , அத போயி கடவுளோட சம்பந்தப் படுத்த முடியுமா? “

“மலம் என்பது செரிக்கப் பட்ட உணவின் சக்கை, அதை உடல் வெளி ஏற்றுகிறது .மனிதனோடு வாழ்ந்து அவனுடைய கஷ்டத்துக்கு உதவ தான மனுசனாவே வராரு, மல ஜலம் கழிச்சா தப்பா?”


“சொன்னா உனக்கு புரியுதா, மனுஷன் மாறியே கல்யாணம் பண்ணி… உடல் உறவு கொள்வது… இதெல்லாம் அசிங்கமா இல்லை?”

“கடவுள் மனுசனா பொறந்து ஒரு மனிதப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி உடல் உறவு கொண்டால் அதில் என்னய்யா தவறு? இன்னொருத்தன் பொண்டாட்டியோடு உடல் உறவு கொண்டால் தான் தவறு. எதுயா அசிங்கம் , நீ நான் சொல்ற படி செஞ்சுட்டு மேலே வா, உனக்கு இதை தாரேன், அதை தாரேன், என்று சொல்லுவதாக கோட்பாடு வைப்பது அசிங்கம் இல்லை , ஒரு பொண்ணை வூரரிய , உறவறிய தொட்டுத் தாலி காட்டி அவளோடு குடும்பம் அடத்தி அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது அசிங்கமா?”


இப்படியாக யாருமே பார்க்காத கடவுளின் பெருமையைக் காப்பற்ற நடத்தப் படும் விவாதங்கள் சூடாகின்றன. இவர்களின் இந்த விவாதங்களைக் கேட்டு சூடாகிப் போன சிலர் இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் என்று கத்தி கம்பு, வாளை ஓங்கி இரத்த ஆறை ஓட விடுகின்றனர்.


இதெல்லாம் தேவையா? நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே, நம்பிக்கை என்பது உண்மை ஆக இருக்கும் என்று அவசியம் இல்லை. உண்மை என்றால் எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.


ஏதோ ஒரு கடவுள் கோட்பாட்டை வைத்துக் கொண்டு , அமைதியாக வழி பட்டு விட்டு சென்றால் பரவாயில்லை. வழிபாடு முடிந்தவுடன் மனதிலே பொறுமையும், நிதானமும் , சிநேகமும், சகிப்புத் தன்மையும் , இணக்கமும், சாந்தமும் … உருவாகுமானால் அது நல்லது. ஆனால் கடவுள் கோட்பாடுகள் சிநேகத்தை சகிப்புத் தன்மையை, சாந்தத்தை … எல்லாம் உருவாக்காமல் மோதலை, அடாவடியை, கட்டாயப் படுத்துதலை… இவை போன்றவற்றை உருவாக்குகின்றன என்றால் இதெல்லாம் நல்லாவா இருக்கு பாஸ்? இதனால் தான் கடவுளை மற மனிதனை நினை என்றனர் சார்வாகர், புத்தர், விவேகானந்தர், பெரியார்… போன்றவர்கள்.

Sunday, June 19, 2011

கடவுள் பற்றி இந்துக்களின் புரிதல் சரியா?


இந்துக்களை பொறுத்தவரையில் அவர்களின் கடவுள் கொள்கை எளிமையானது. கருமாரி அம்மனையோ, ஐய்யப்பனையோ, முருகனையோ, இராமரையோ….. அவர்கள் குடும்பத்தில் முக்கியமாக வழிபடும் கடவுளை கும்பிடுகின்றனர். “நாம கும்பிடர சாமி நம்மைக் காப்பாத்தும்” என்று நம்பும் அவர்களின் கோட்பாடு எளிமையானது.
 இதிலே ஒரு முக்கிய  விடயம்  என்னவென்றால், இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்பது போன்றவற்றையோ சொன்னதாக இல்லை. இது விடயமாக சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது, தான் ஒரு இனத்தை மட்டுமே முன்னுரிமை குடுத்து வாழ  வைப்பேன் என்று இந்துக் கடவுளாவது  சொன்னதாக இருக்கிறதா, எந்த இந்து மத நூல்களிலாவது அப்படிக் காட்ட முடியுமா என்று சொல்லி இருக்கிறார்.
எனவே முருகனை வணங்குபவர் வாய்ப்பு கிடைக்கும் போது வெங்கடாசலபதியையோ, லக்ஷ்மியையோ…. வணங்கவும் செய்கின்றனர்.
இன்னும் சொல்லப் போனால் இந்துக்கள் மேரி மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கின்றனர். மசூதிக்கு சென்று சுகம் இல்லாத  பிள்ளைகளுக்கு மந்திரிக்கினறனர்.
இந்து மத்திலே எளிமையான மக்களின் இந்த  அமைதியான கடவுள் கோட்பாடு இவ்வாறு இருக்க, இந்து மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் இன்னும் பல ஆழமான சிந்தனைகளை முன் வைக்கினனர். மனிதனின் உயிர் (soul), கடவுள் என்கிற நிலைக்கு உயர முடியும்,  அடைய முடியும் என்பதை இந்து மதத்தின் முக்கிய கோட்பாடாக பல பண்டிதர்கள் சொல்லுகின்றனர். இதிலே சில சிந்தனையாளர்கள் ஒரே கடவுள்தான் உருவமற்ற நிலையிலும், உருவமுள்ள நிலையிலும் இருப்பதாகவும் அதே கடவுள் பல  அவதாரங்களை உருவங்களை எடுப்பதாகவும் சொல்லுகின்றனர்.
இந்தக் கோட்பாட்டை ஆராயும் போது இதிலே சில சந்தேகங்கள் வருவதாகவும், சில முரண்பாடுகள் தோன்றுவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது பற்றி அன்புக்குரிய நண்பர் திரு. ரசீன் அவர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டு தன்னுடைய வினாக்களை எழுப்பியுள்ளார்.
கடவுள்!…. ஹிந்துக்களின் புரிதல்….


மனிதன் ஒருவனாக இருந்தாலும்,மகன் வேறு,கணவன் வேறு,சகோதரன் வேறு.இது எல்லாமேசுவாமிநாதன்தானேன்னு,அம்மா அவனை வேறு பெயர்களில் அழைக்க் முடியாது.அதுபோலசுவாமிநாதனும்,தாயிடம் மகனாக மட்டும்,மனைவியிடம் கணவனாக மட்டும்,பிள்ளைக்குதகப்பனாக மட்டும் தங்கைக்கு அண்ணனாக மட்டும் இருக்கமுடியும்அதில் மாற்றம் வந்தால்,அதை விட கொடுமை ஏதும் இருக்க முடியாது..
இதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்…. ஆனால் கடவுள்அப்படி இல்லையே..அவன் எல்லாருக்கும்எல்லாக் காலங்களிலும்எல்லாமுமாய்இருக்கக்கூடியவன் ஆயிற்றே..அவன் ஒருவனுக்கு ஒருமாதிரியும்,மற்றவனுக்கு வேறுமாதிரியும்இருப்பதில்லையே..   அவர் சொன்ன அதே உதாரணத்தை ஹிந்து கடவுள்களுக்கு பொருத்திப்பார்த்தோமானாலும்,அவையும் பொருந்தாத ஒன்றாகவேஇருக்கிறதுசிவன்,பிள்ளையார்,முருகன்,ராமன்,ஹனுமன்,காளி,மாரியம்மன்என எண்ணில்அடங்காத ஆண்பெண் கடவுளர்கள் ஹிந்துமதத்தில் உண்டு… முதலில்,இத்துனை பெயர்களில்வழங்கப்படும் அந்த ஒற்றைக்கடவுள் யார்??? இப்போ சகோ பிரதாப்பின் கூற்றுப்படி எல்லாம்ஒரே கடவுள்.அவருக்கு,பல பெயர்கள் என்றால்.முருகனை,விநாயகா!… அப்டீன்னோசிவனை,காளின்னோராமனைமாரின்னோ வணங்க முடியுமா???,,,அப்படி முடிந்தால் தானேஅவர் கூற்றுமெய்யாகும்அப்படி முடிந்தால்தானே….அனைத்து கடவுளும் ஒன்று என்ற நிலை வரும் ஆனால்அது சாத்தியமா?..  


இல்லையேஎல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னுசொல்பவரே… இப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்என்னசொல்வார்அட பைத்தியக்காரா!!!…எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடாநல்லாப்பாரு….இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???…..


திரு ரசீன் அவர்கள் கேட்டது போல, முருகன் சந்நிதானத்தில்  சென்று “இராமா” என்று  கூப்பிட்டு யாரும் வணங்குவது   இல்லை. அப்ப முருகன் வேறு, இராமன் வேறு தானே, இராமனும் முருகனும் , பிள்ளையாரும், காளியும் … எல்லாம் எப்படி ஒன்றே என கருதப் பட முடியும் என்கிற கேள்வியை கேட்கிறார்.
 இந்துக்கள் வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளன. இராமரின் தத்துவமானது மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பங்களை ஏற்றுக் கொள்ளும்  தியாகத்தின் தத்துவமாக , பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போனறது, கொள்கை  என்பது இடுப்பில் அணியக் கூடிய வேட்டி போன்றது என்கிற கொள்கையை வாழ்ந்து காட்டியவராக, தன மனைவியை தவிர பிற பெண்களை எண்ணாத   விரும்பாத வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டியவராக உள்ளார்.
அனுமனின் கோட்பாடோ, நல்ல கோட்பாடுகளை உடைய ஒரு நல்லவர் , அவர் வாழ்க்கையில் இவ்வளவு தியாகம் செய்தும், அவருக்கு இத்தனை துன்பங்களா என்று இனி, எந்த ஒரு பிரதிபலனும் கருதாமல் நியாயத்துக்காக போராடிய மாவீரனின் கோட்பாடாக உள்ளது. பதவியையோ, செல்வத்தையோ எதிர்பார்க்கவில்லை அனுமன்.
துர்க்கை, காளி ஆகியோர் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளை எதிர்த்து சீறி, அநியாய அக்கிரமக்காரர்களை கருவறுக்கும் பெண்மையின் வீரத்தை கோட்பாட்டை விளக்கும் வகையில் உள்ளது.
நாட்டை விட்டுக் கொடுத்து காட்டுக்கு சென்ற , ஏக பத்தினி விரதனாக அவதரித்த அதே கடவுள்,    அக்கிரம கொடுங்கோலனை பொறுக்காமல் பெண்ணே சிலிர்த்து  சீறி போராடும் கோட்பாட்டை சொல்லும் போது காளியாக பெண்ணாகத்தான் தானே வடிவெடுக்க முடியும்.
 எனவே ஒருவன்  காளியை வழி படும் போது, “பொம்பளைங்க கைல ராங் காட்டாத நைனா, அவங்களுக்கு கோவம் வந்தா சீறி உன் தலையை சீவிடுவாங்க, கடவுளே அதைக்  காட்ட காளியா வந்துக்குரா” என்கிற சிந்தனையை பெறுகிறான்.
அவனே   இராமர் சந்நிதிக்கு வரும்போது, சீதையை பார்க்கும் போது, ஆண்களின் காமத்தால் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது, இராமனைப் போல மனைவியைத் தவிர பிற பெண்களை இச்சை கொள்ளாமல் வாழ்ந்தால் சமூகத்துக்கு நல்லது என்கிற சிந்தனை நிச்சயம் வரும்.
எனவே ஒரு கடவுள், அவ்வப் போது சூழ்நிலைக்கு ஏற்ப  ஆணாகவும்,  நேரத்தில் பெண்ணாகவும் வடிவெடுத்து வரக் கூடும் என்பதே இதன் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளலாம். 
திரு. ரசீன் எழுப்பிய பிற சந்தேகங்களுக்கான விளக்கத்தை நாம் பிற கட்டுரைகளில் தொடர்ந்து வழங்குவோம்.
(தொடரும்)






இல்லையேஎல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னுசொல்பவரே… இப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்என்னசொல்வார்அட பைத்தியக்காரா!!!…எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடாநல்லாப்பாரு….இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???…..

Wednesday, April 13, 2011

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து இந்து ம‌த‌ இராஜ்ஜியமா?

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து இந்து ம‌த‌ இராஜ்ஜியமா?

"இராம‌ இராம‌ ஜெய‌ இராஜா இராம்'' என்ற‌ க‌ட்டுரையை நாம் இந்த‌க் க‌ட்டுரைக்கு முன்பு வெளியிட்டோம். We published that at thiruchchikkaaran.worpress.com

அத‌ற்க்கு முன்பாக‌வே நாம் ''எல்லொரும் கொண்டாடுவொம் அல்லாஹ்வின் பெய‌ரை சொல்லி'' என்ர‌ த‌லைப்பிலும், ''ஆத‌வ‌ன் உதிக்கும் முன் எழுவீர் இயேசு ஆண்ட‌வ‌ர் தோன்றி விட்டார்'' என்ற‌ த‌லைப்பிலும் க‌ட்டுரைக‌ளை இட்டு, கிறிஸ்தும‌ஸ், ஈத் , தீபாவ‌ளி போன்ற‌ ப‌ண்டிகைக‌ளை உல‌கில்  அனைவ‌ரும் கொண்டாடுவ‌து நல்லிண‌க்க‌த்துக்கு வ‌ழி வ‌குக்கும் என்று எழுதி இருக்கிரோம்.

ஆனால்  "இராம‌ இராம‌ ஜெய‌ இராஜா இராம்'' என்ற‌ த‌லைப்பில் க‌ட்டுரை வெளியிட்ட‌வுட‌ன் நாம் இந்தியாவில் இராம‌ இராஜ்ஜிய‌ம் அமைய‌ வேண்டும் என்ற‌ க‌ருத்து உடைய‌வ‌ரோ என்கிற‌ எண்ண‌ம் சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு வ‌ந்திருந்தால் அதை விள‌க்க் வேண்டிய‌து ந‌மது க‌ட‌மை ஆகும்!

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து இந்து ம‌த இராஜ்ஜிய‌ம் என்ப‌தாக‌வோ, ச‌ங்க‌ ப‌ரிவார‌ இய‌க்க‌ங்க‌ளின் ம‌த‌க் கோட்பாடுகளை செய‌ல் ப‌டுத்தும் இராஜ்ஜிய‌மாக‌வொ இருந்தால் , அப்ப‌டிப்ப‌ட்ட‌ இராம‌ இராஜ்ஜிய‌ம் வேண்டாம்.

ஆனால் இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து உண்மையில் என்ன‌?
 இராம‌ர் எந்த‌ ஒரு ம‌தத்தையும் தோற்றுவிக்க‌வொ, பிர‌ச்சார‌ம் செய்ய‌வோ, அந்த‌ ம‌தம் ம‌ட்டுமே இவ்வுல‌கில் இருக்க‌ வேண்டும் என்று சொல்லிய‌தாக‌வோ  இல்லை.

இராம‌ர் வாழ்க்கையில் ப‌ல்வேறு துன்ப‌ங்க‌ளை உருவாக்கி, அவருடைய‌ முக்கிய‌ அரசிய‌ல், போர்க்க‌ள‌ எதிரியாக‌ செய‌ல் ப‌ட்ட‌ இராவ‌ண‌ன் இந்து ம‌த‌த்தை (அக்கால‌த்தில் ச‌னாத‌ன‌ த‌ர்ம‌ம் என‌ அழைக்க‌ப் ப‌ட்ட‌)  சேர்ந்தவ‌ராக‌, அதுவும் பார்ப்ப‌ன ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்திருக்கிறார். நான்கு வேத‌ங்க‌ளையும் கற்று, ப‌ல‌ யாக‌ங்க‌ளையும், த‌வ‌ங்க‌ளையும் செய்த‌வ‌னாக‌ இருந்திருக்கிரான் இராவ‌ண‌ன்.

இராம‌ர் ஆட்சி செய்த‌ போது ம‌க்க‌ளிட‌ம் மிக‌வும் ப‌ரிவுடைய‌ ஒரு ம‌க்க‌ள் ந‌ல‌ ஆட்சியை த‌ந்து இருக்கிரார் என‌ சொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌து. 14 வ‌ருட‌ம் காட்டிலே வ‌சித்த‌  இராம‌ன்,ம‌க்க‌ளுக்கு அதிக‌ வ‌ரிக‌ளைப் போட்டு, தான் ஆட‌ம்ப‌ர‌த்திலே திளைக்க‌வில்லை, ம‌க்க‌ள் ந‌ன்மைக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தான். ம‌க்க‌ள் வ‌ருத்த‌ப்ப‌ட்டால், அதை பார்த்து தான் வ‌ருத்த‌ப் ப‌ட்டான் இராம‌ன், ம‌க்க‌ள் மகிழ்ச்சி  அடைந்த‌  போது அதைக் க‌ண்டு தான் ம‌கிழ்ச்சி அடைந்தான். இவ்வாறு  குடி ம‌க்களை த‌ன் த‌ந்தையாக‌, ச‌கோத‌ர‌ராக‌... க‌ருதி ஆட்சி செய்து இருக்கிறான், என்று சொல்லிகின்றன‌ர்.
ம‌க்க‌ளும் இராம‌னை த‌ங்க‌ள் ம‌க‌னாக‌  எண்ணின‌ர்.


த‌ச‌ர‌த‌ன் வாழ்ந்த‌ கால‌த்திலே, அவர் முத‌லில் இராம‌னுக்கு ப‌ட்ட‌ம் க‌ட்ட‌ முடிவு செய்த‌ போது, பொது ம‌க்க‌ள் எப்ப‌டி ம‌கிழ்ந்த‌ன‌ர் என்ப‌தை க‌ம்ப‌னின் வ‌ரியிலே

//மாத‌ர‌ர் வ‌ய‌தின் மிக்கார் கோச‌லை ம‌ன‌தை ஒத்தார்,

         வேதிய‌ர் வ‌சிட்ட‌னின் ம‌ன‌தை ஒத்தார்,

வேறுள‌ மாந்த‌ர் எல்லாம் சீதையின் ம‌ன‌தை ஒத்தார்,

              அன்னாள் திருவினை ஒத்தார்//

என‌ உள்ள‌து.

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்கிற‌ வாச‌கத்தை முத‌லில் நான் கேள்விப்ப‌ட்ட‌து காந்தியின் எழுத்துக்க‌ளில் இருந்துதான். காந்தியிட‌ம் இராம‌ரின் தாக்க‌ம் அதிக‌ம் உண்டு என‌ நினைக்கிறேன்.

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து ந‌வீன‌ இந்தியாவில் சிந்த‌னையாள‌ர்க‌ள் மத்தியில் பிர‌ப‌ல‌மாவ‌தற்க்கு கார‌ண‌ம் காந்திதான்.

ஆனால் எண்ப‌துக‌ளில் இந்த‌ இராம‌ இராஜ்ஜிய‌ம் என்கிற‌ வாச‌க‌மான‌து, பி.சே.பி, ஆர். எஸ். உள்ளிட்ட‌ பரிவார‌ அமைப்புக‌ளால் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.
ஆறாம் வ‌குப்பு ப‌டிக்கும் போது ஆர். ஏஸ். ஷாகாக்க‌ளை வேடிக்கை பார்ப்பேன். காவி கொடியை ஒரு கொடிக் க‌ம்பத்தில் ந‌ட்டு வைப்பார்க‌ள். காக்கி டிர‌வுச‌ர் அனிந்த‌ ஒரு குருஜி விளையாட்டுக‌ளை சொல்லிக்  கொடுத்த‌தைக் க‌வ‌னித்து இருக்கிறேன். காவிக் கொடியை ஏற்றி, ஹிம்ம‌த்து அப்னி, தாஅக்க‌த்து அப்னி, அப்னா வீர‌ ஜ‌வான் ...என்று பாடுவார்க‌ள்.

ஆனால் அவ‌ர்களுக்கும் இராம‌ இராஜ்ஜிய‌த்துக்கோ குறிப்பிட்ட‌ தொட‌ர்பு எதுவும் இருப்ப‌தாக‌ என‌க்கு தோன்றிய‌தில்லை.

ஆனால் எண்ப‌துக‌ளில் போப‌ர்ஸ் ஸ்கேண்டலினால் ராஜீவ் காந்தி க்கு  ம‌க்க‌ளிட‌ம் செல்வாக்கு குறைந்த‌ கால‌த்திலே, அர‌சிய‌லில் முன்னுக்கு வ‌ர‌ பி.செ.பி. இராம‌ரை முழுமையாக உப‌யோகித்தது.

எந்த‌ ஒருவ‌ர்  த‌ன்னுடைய‌ ப‌த‌வி, வீடு, ந‌க‌ர‌ம், ம‌க்க‌ள் எல்லாவ‌ற்றையும் விட்டு விட்டு காடு சென்றாரோ, அவ‌ருக்கு இருந்த‌ செல்வாக்கு, புக‌ழ் , ப‌க்தி அனைத்தையும் தான் ப‌த‌வியைப் பிடிக்க‌ உப‌யோகித்துக் கொண்டன‌ பி.சே.பியும், ப‌ரிவார‌ இய‌க்க‌ங்க‌ளும் !


இதனால் இராம‌ இராஜ்ஜிய‌ம் என்றால் பி.சே.பி ஆட்சி அல்ல‌து இந்து ம‌த‌ ஆட்சி என‌ எண்ணும்ப‌டி ஆகி விட்ட‌து.


என‌வே முத‌லில் த‌ன்னுடைய‌ சிற்ற‌ன்னை கைகெயியாலும்,பின்னர் இராவ‌ண‌னாலும் , அத‌ன் பின்ன‌ர் சில‌ராலும் ப‌ல்வேறு இன்ன‌ல்களை அடைந்த‌ போதும், அவ‌ற்றை பொறுமையாக‌ ஏற்ற‌  இராம‌னின் கோட்பாட்டுக்கு ந‌ம்முடைய‌ கால‌த்திலே ஏற்ப‌ட்ட‌ சோத‌னை என்ன‌வென்றால், பி.சே.பி ஆட்சி தான் இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து போல‌ ஒரு க‌ருத்து உருவான‌துதான்.

(தொட‌ரும்)

Sunday, January 16, 2011

குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் என்ன? – காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பட்டி மன்றம்!

அன்புக்குரிய நண்பர்களே….. நலந்தானே ….. இது பட்டி மன்றம், நல்லா சிரிங்க,  அப்பப்ப கை தட்டுங்க..

இந்திய சமூகத்தின் அடிப்படை குடும்பமே.  குடும்பங்களே இந்திய சமுதாயத்தை உருவாக்குகின்றன. ”நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” அப்படின்னு சொல்லி இருக்கங்க. எனவே குடும்பங்கள் சிறப்படைந்து அதிக வளமையும் செல்வாக்கும் பெற்றால் நாடு முன்னேறும்.


எனவே இன்றைய பட்டி மன்றத்திலே  5 அணிகள் கலந்து கொண்டு சொற் போர் ஆற்ற இருக்கிறார்கள்.


என்னய்யா, தூங்கிடாதீங்க… தூங்கினா  நான் அப்பப்ப கடி ஜோக் அடிப்பேன்.
மேலும் இது இணைய தள  பட்டி மன்றம் ஆதலால் கொஞ்சம் வித்யாசமானது. தலைப்பை  மட்டும்   தான் நாங்க சொல்லுவோம்.  எந்த தலைப்பு உங்களுக்கு சரின்னு தோணுதோ அந்த தலைப்பின் சார்பாக நீங்களே வாதத்தை முன் வைக்கலாம். எவ்வளவு ஜனநாயகம் பாருங்க.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப அங்கத்தினர்கள் நிறைய பணம் சம்பாரித்து வளமையாக இருப்பதே!என்ற தலைப்பை வலியுறுத்தி கம்பன் அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதே! என்ற தலைப்பை வலியுறுத்தி இளங்கோ அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப தலைவர் பிற குடும்பங்களுடன் நட்பை உறுதியாக வைத்திருப்பதாலேயே! என்ற தலைப்பை வலியுறுத்தி பாரதி அணியினர் பேசலாம்.


 குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு இலவசங்கள் வழங்கப்  படுவதாலேயே!என்ற தலைப்பை வலியுறுத்தி வள்ளுவர் அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப அங்கத்தினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதே! என்ற தலைப்பை வலியுறுத்தி பாரதிதாசன் அணியினர் பேசலாம்.

முக்கிய குறிப்பு: இந்த பட்டி மன்றம் பொதுவாக  இந்திய குடும்பங்கள், தங்களை வளர்ச்சி அடைய செய்வது பற்றிய காரணங்களை அலசும் பட்டி மன்றம். இது எந்த தனிப் பட்ட குடும்பத்தையோ, சில குடும்பங்களைப் பற்றியோ ஆராயும் பட்டி மன்றம்  அல்ல. இதை உணர்ந்து நண்பர்கள் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் காத்து பின்னூட்டங்கள்  மூலம்  சொற்போர் ஆற்றலாம்.  ஒரு சிலரைக் குறிப்பிட்டு  கருத்து சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


அனைவரையும் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.  (யாரும் உரை ஆற்ற வராவிட்டாலும் நாங்க ஈ ஒட்டி விட்டு எழுந்து செல்வோம்)!


Title: குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் என்ன? – காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு   பட்டி மன்றம்!

Saturday, January 15, 2011

மந்திரத்தில் மாங்காய் விழாது - சங்கராச்சாரியார் அதிரடி !

இந்து மதம் ஆழமான ஆன்மீக சிந்தனைகளையும் , விரிவான பல ஆன்மீக முன்னேற்ற முறைகளையும் உடையது.


தனக்கு எதுவுமே வேண்டாம் என்று காட்டுக்கு சென்று கனிகளையும், கிழங்குகளையும் உண்டு தவம் செய்யும் சித்தனும் இந்துதான், அவ்வப் போது கோவிலுக்கு சென்று வழிபடுபவனும் இந்துதான். எந்த வழிபாடும் செய்யாவிட்டாலும், யாருக்கும் தீங்கு நினைக்காமல், யாரையும் ஏமாற்றாமல், தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்று இருப்பவனும் இந்துதான். இந்து மதம் ஒருவன் தன் கடமைகளை சிறப்பாக செய்தால் அதுவே சிறந்த ஆன்மீக முயற்சி என்கிறது. தியாகம், தியானம், தவம், பக்தி, யோகம்… இவ்வாறாக பல ஆன்மீக முறைகளை முன் வைக்கிறது.இவற்றில் ஒரு முறைதான் யாகம் அல்லது வேள்வி.


அவரவர்க்கு பொருத்தமானதை அவரவர் எடுத்துக் கொள்ளலாம்.


இந்து மதத்தின் மந்திரங்களில் இரண்டு வகை உண்டு.

ஒன்று அறிவைத் துலக்கி உண்மையை  தேடும் ஆராய்ச்சி, அவற்றில் கண்டுணர்ந்த முடிவுகள் ஆகியவற்றின் தொகுப்பான உப நிடத மந்திரங்கள்.


உதாரணமாக,
  உண்மையே  வெல்லும் - ”சத்யமேவ ஜெயதே”"என்பது முண்டக உபநிடதத்தின் ஒரு வாக்கியம் ஆகும்.


உத்திஸ்டத,  ஜாக்கிரத, பிராப்யவரான்   நிபோதித”  – (எழுமின்,  விழிமின், குறி சேரும் வரை நில்லாது செல்மின்”) என்பது கட உபநிடத வாக்கியம்  ஆகும்.


இன்னொரு வகையான மந்திரங்கள் மக்கள நலனை முன்னிட்டும், சொந்த விருப்பத்தின் காரணமாகவும் தேவர்களை  நோக்கி வேண்டப்படுவதாக அமைந்து உள்ளது. இவைகள் யாகத்தின் போது சொல்லப் படுகின்றன.
யாகம் என்பது பெரும்பாலும் அரசர்களால் செய்யப் படுவது. யாகத்தின் போது ஏழை எளியவர்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குதல் முக்கிய மாக வற்புறுத்தப் பட்டுள்ளது. தானம் இல்லாத யாகம் வீண் என்று சொல்லி உள்ளனர்.

இந்துக்களின் அடிப்படையான புனித நூல்கள் ரிக், யஜூர், சாமம் , அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், மற்றும்பகவத் கீதை உள்ளிட்ட ஸ்ருதி எனப் படுபவை ஆகும்.

ஒவ்வொரு வேதத்திலும்,  யாகங்களை செய்ய வேண்டிய முறைகள் அவற்றை செய்யும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஆகியவை தெளிவாக விளக்கப் பட்டு உள்ளன.

உலகின் முதல் வாக்கியம் என்று ஜெர்மானிய அறிங்கர் மாக்ஸ் முல்லரால்  சொல்லப் பட்ட,  அக்னி மீலே புரோஹிதம்” என்று தொடங்கும் ரிக் வேதத்தின் முதல் செய்யுள், இந்த வேள்வி மந்திரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.


வேதங்களின் முடிவுப் பகுதியான வேதாந்தம், மனித வாழ்க்கை, மனித உயிர், அது விடுதலை பெற்ற நிலையை அடையும் முறைகள் ஆகியவற்றை பற்றிய ஆராய்ச்சிகளும், அறிவிப்புகளும் உள்ளன.
வேதங்களை கற்பதும், ஓதுவதும், பிறருக்கு பயிற்று விப்பதும், இந்து மதத்திலும் முக்கிய செயலாக இருந்தது. 

வேதங்களை தொடர்ச்சியாக சரியான ஓசை மற்றும் இசை நயத்துடன் உச்சரிக்கும் போது, அவை கேட்போருக்கு மனதிலே ஆன்மீக உணர்வை வூட்டுவதாக இருந்தது.

காலப் போக்கில்   வேதங்களை படித்து மந்திரங்களை சரியாக உச்சரித்தால் போதும் என்கிற எண்ணம் பலரின் மனத்தில் தோன்றி இருந்தது.
மந்திரங்களை  உச்சரித்தால் போதும், நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் தீரும் என்று எண்ண ஆரம்பித்தனர்.


ஆனால் ஆதி சங்கரர் அது போதாது என்பதை அறிந்து கொண்டார்.  ஒருவர்  தன் மனதில் ஆசைகளை  குறைத்துக் கொண்டே வந்து , மனதிலே அமைதியை  நிலவச் செய்து, தன்னுடைய உண்மை நிலையை அறிவதாலேயே துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார்.


எனவே வெறுமனே மந்திரங்களை உச்சரித்து மங்களம் பாடினால் ஒருவன் காக்கப் பட மாட்டான் என்பதை குறிக்கும் விதமாக “‘நஹி நஹி ரக்ஷதி,  டுக்ருங் கரனே”  என்று பாடினார் சங்கராச்சாரியார்.


உபநிடத வாக்கியங்களான
அசத்தோமா சத் கமய , (From untruth to tuth / from illusion to truth)
தமசோமா ஜ்யோதிர்கமய ( From darkness to light )”" 
போன்றவை குறிக்கோளை உணர்த்தும், மக்களின் அறிவைத் தூண்டும் வாக்கியயங்கள், அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியில் நாம் செல்ல வேண்டும், வெறுமனே அவற்றை உச்சரித்தால் போதாது என்பதை அதிரடியாக தெளிவு படுத்தி இருக்கிறார் சங்கராச்சாரியார்.


நன்கு வேதங்களையும் கற்று தேர்ந்தாலும், அவற்றில் சொல்லப் பட்டுள்ள மந்திரங்களி, தெளிவாக பிழை இல்லாமல் உச்சரித்தாலும் அவை எல்லாம் ஒருவனைக் காக்காது. சிறு வயதில் குழந்தையாகவும், பின்னர் இளைங்கனாகவும், பின்னர் முதியவனாகவும்… இப்படி தன் நிலைமை  மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதன் தன்னை அரசனாகவோ , ஆண்டியாகவோ  கருதிக் கொண்டாலும் கடைசியில் பிடி சாம்பலாகிறான் அல்லது மண்ணுக்குள் மக்குகிறான்.

எனவே எத்தனை வேதங்களை கற்றாலும், இன்ப  துன்பங்களை சமமாக என்னும்  மன நிலையை அடையும்  படிக்கு ஒருவன்  தன்  சிந்தனை , சொல், செயல்  பக்குவப் பட்டு உயர் மன  நிலையை  அடைவதே அவன் விடுதலை அடைவது ஆகும் என்கிற கோட்பாட்டையே சங்கராச்சாரியர் சொல்லுகிறார். புத்தரும் அதே கோட்பாட்டையே சொல்கிறார்.

 புத்தருக்கும் சங்கரருக்கும்  உள்ள  வித்யாசம்( on philosophical terms) என்ன வென்றால், விடுதலை அடைந்த பின் அந்த உயிரின் நிலை என்ன என்பது பற்றியே- புத்தர் விடுதலை அடைந்த பின் ஒன்றுமில்லை, சூனியம் தான், கஷ்டம் தீர்ந்து விட்டது அப்புறம் என்ன என்கிறார், ஆதி சங்கரர் அந்த உயிரின் நிலை விடுதலை பெற்ற, அழிவற்ற , துன்பங்கள் இல்லாத நிலையிலே தொடர்ந்து உயிரோடு இருப்பதாகவும், தன்னுடைய உண்மை நிலையை அந்த உயிர் அறிந்ததாகவும் – எல்லா உயிரும் உண்மையில் அழிவற்றதாக அளவற்ற வலிமை உடையதாக வேறுபாடில்லாமல் ஒன்றாகவே இருப்பதாகவும் சொல்கிறார்.


உண்மையை உணர்ந்து   விடுதலை அடையாத  உயிர், மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுத்து தொடர்ந்து துன்பத்தில் உழல்வதாக  கிட்டத்தட்ட இந்து மத ஞானிகள்   அனைவரும் சொல்லுகின்றனர்.

இந்தக் கோட்பாடு இந்து புத்த, சமண மதங்களின் மையக் கோட்பாடாக,  தத்துவ இணைப்புக் கோட்பாடாக உள்ளது.

காசியில் ஒரு வேத பாடசாலையில் பண்டிதர்களுடன் விவாதித்து விட்டு வெளியே வரும் போது வேதம் படித்த ஒருவர் “‘டுக்ருங் கரனே”" என்னும் சமஸ்கிருத இலக்கிய பத்தை திரும்ப திரும்ப சொல்லி மனப் பாடம் செய்து கொண்டிருப்பதை கண்டார்.


இக்காலத்திலும் நாம் பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி யை உரு அடித்து அப்படியே அடி மாறாமல் எழுதி நிறைய மதிப்பெண் பெறுகிறோம் அல்லவா. ஆனால் வெறுமனே உரு அடிப்பது உபயோகம் இல்லை. அதைப் புரிந்து கொள்வதும் அடுத்த நிலையே. சோதனை சாலையில் அந்த பரிசோதனையை செய்து சரி பார்ப்பது, தானே ஆராய்ச்சின் முடிவை அறிந்து கொள்வது இவையே ஒருவனை அறிஞன்  ஆக்கும் அல்லவா.


அதைப் போல மந்திரங்களை உச்சரித்தால் போதும், அந்த மந்திரங்கள் தங்களைக் காக்கும் என்கிற நினைப்பை மாற்றி, கனவில் இருந்து எழுப்பி, ஒருவன் தன்னைத் தானே உயர்த்தி மனதை வலிமை பெறச் செய்து உண்மையை அறிய வேண்டும் என்கிற  பகுத்தறிவுப் பாதைக்கு அவர்களை கொண்டு வந்த சங்கராச்சாரியார் உண்மையில் ஒரு அதிரடி புரட்சிக்காரரே!

Thursday, January 13, 2011

நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்!

  தமிழ் சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்று பொங்கல். தமிழ் சமுதாயம் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்  சரி, அது தமிழ் நாடோ, ஈழமோ, சிங்கப்பூரோ, தென் ஆப்பிரிக்கவோ, அமெரிக்கவோ, பிஜியோ.... எங்கிருந்தாலும் தமிழ் சமுதாயம் இருந்தால் அங்கே பொங்கலும் இருக்கும்

 பொங்கலின் பரிமாணங்கள் பல.  


சிறு வயதில் பொங்கல் பண்டிகை என்றால் வூரே களை கட்டுவதைப் பார்த்து இருக்கிறேன். எல்லோரும் கடைத் தெருவுக்கு வந்து மஞ்சள், கரும்பு, வாழை, புதுப் பானை .. இவற்றை வாங்கி கொண்டு தெருவில் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.


எனக்கு சர்க்கரைப் பொங்கல் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்கு வெளியிலே தான் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ பொங்கல்"என்று கத்துவோம். பொங்குகிற நேரத்திலே வேறு ஏதாவது விளையாட்டுக்கு போய் விட்டு, "'பொங்கலோ பொங்கல்' என்று கத்தாமல் விட்டு விட்டால் அப்புறம் ரொம்ப நாளைக்கு பீலிங்ஸா இருக்கும்.


பொங்கல் அன்று படையல் எல்லாம் போட்டு சாப்பிட்டு விட்டு  கரும்பையும் அன்று தின்றே ஆக வேண்டும். இதை எல்லாம் முடித்து விட்டுமெதுவாக நண்பர்கள் வீட்டுக்கு உலாவ  போவாம்.  நண்பன் அம்மா கண்ணில் மாட்டினால் அவ்வளவுதான். கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டு தான் போகணும் என்பார்கள்.. வீட்டில சாப்பிட்டோம் மா... என்றால் கேட்க  மாட்டர்கள். வற்புறுத்தி உண்ண வைப்பார்கள். எத்தனை நண்பர்கள் வீட்டில் சாப்பிட முடியும்?

பொங்கலின் முக்கிய பரிமாணங்களில்  ஒன்று பொங்கல் வாழ்த்துக்கள். வண்ண மயமான வாழ்த்து அட்டைகள். அவற்றை முகர்ந்தால் ம்... ம்....எவ்வளவு வாசனை. எல்லா கடவுள்களின் படத்தையும் பொங்கல் வாழ்த்தாகப் பார்க்கலாம். அதோடு நடிகர்களின் படம் வேறு, எம். ஜி.ஆர் , சிவாஜி படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள் முன்பு பிரபலம். அதிலே சொர்க்கம் படத்தில் சிவாஜி "பொன்மகள் வந்தால் படத்தில் பணக் காசுகளுக்கு நடுவில் புரளும் படத்தை போட்டு,  தங்க காசுகளை அப்படியே கொஞ்சம் விளிம்பிலே வெட்டி  3D எபக்ட் கொடுத்து இருப்பார்கள்எனக்கு விஜய் ஸ்ரேயா நடித்த  ரி- மிக்ஸ் - பொன் மகள் வந்தால்  பாட்டைக் கேட்கும் போது அந்த பொங்கல் வாழ்த்தின் நினைவுதான் வரும். சிறுவனாகவே இருந்திருக்கக் கூடாதா, வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்

நண்பர்கள்  அனைவருக்கும்  பொங்கல் வாழ்த்துக்கள்.

மேலும் இந்த புத்தாண்டு அரசியலில் நான் இறங்க விரும்பவில்லை. இத்தனை நாள் கழித்து வந்த ஞானோ தயமாக தமிழ் புத்தாண்டை பொங்கலோடு இணைத்து இருக்கிறார்கள்நாளைக்கு ஆட்சி மாறினால் திரும்பவும் மாற்றுவார்கள்இவரகளின் அரசியலில் நாம் இறங்கக விரும்பவில்லை. பின்பற்றுவதோ  கிரிகோரியன் கேலண்டர் எனப் படும் ஐரோப்பிய கால ஆண்டு அட்டவணையை. எப்படியோ இவர்களின்  அரசியல்,  பொங்கலின் மகிழ்வை கெடுக்க நான் விரும்பவில்லை.

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்.  

Wednesday, January 12, 2011

தைரியமாக இரு, எழுந்து நில், நீ வலிமை உடையவன்! உனக்குத் தேவையான எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது



தைரியமாக இரு, எழுந்து நில், நீ வலிமை உடையவன்! உனக்குத் தேவையான எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது”- சோர்வுற்ற , கஷ்டப்பட்ட, வாய்ப்பிழந்த அப்பாவியின் நண்பன், ஆசான் சுவாமி விவேகானந்தர்.  


                     
            
          
                         

இந்தியர்களின்   தன்னம்பிக்கையை  வலுவடைய செய்த சுவாமி விவேகானந்தரின் 150௦ ௦ வது  பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று துவங்குகின்றன. இந்திய அரசு  ஒரு குழுவை அமைத்துஅதன் தலைவராக மாண்புமிகு பிரதமரே அமர்ந்து இருக்கிறார்


 சுவாமி விவேகானந்தர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். இந்தியாவிற்கு வெளியே மத நல்லிணக்கம் என்கிற கோட்பாட்டை  அறிமுகம் செய்தவர் சுவாமி விவேகானந்தரே. எல்லா மதங்களையும் அங்கீகரித்து, எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல் பட முடியும் என்பதை எடுத்துக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தர் சாதாரண பிட்ச்சாண்டி துறவியாகவே தமிழகம் வந்தார். அவரை சரியாக அடையாளம் கண்டு அமேரிக்கா செல்ல உதவியது தமிழகத்தில் இருந்தவர்களே. அவர் அமெரிக்காவில் கொண்டு போன பணம் எல்லாம் செலவான நிலையில், "குளிராலோ , பசியாலோ நான் இங்கு இறக்க நேரிடலா, ஆனால் இந்தியாவில் வாழும் கோடி மக்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று எழுதினார். "பிச்சை எடுப்பதற்காக தெருவுக்கு சென்று இருந்தால் அமெரிக்காவில் சிறை வாசமே என் முடிவாகி இருக்கும்" என பிறகு குறிப்பிட்டார். அந்த நிலையில் அவருக்கு பணம் அனுப்பி உதவியது சென்னையில் இருந்தவர்களே.


சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கைக் கருத்துக்களை, பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை  மத நல்லிணக்கக் கோட்பாட்டை விளக்குவதில் பரப்புவதில் தமிழகம் என்றும்  முன்னணியில் நிற்கும்.


            
                                     

Tuesday, January 11, 2011

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இராமாயண ஆய்வு!

எந்த அளவுக்கு சமீபத்தில் நடந்ததோ அந்த வரலாற்றை எளிதாக கணிக்க இயலும்.  எந்த அளவுக்கு பழமையாக உள்ளதோ அந்த அளவுக்கு வரலாறு கணிக்க கடினமாக உள்ளது.


வரலாற்றை அறிவியல் போலத் திண்ணமாக கணிக்க இயலாது. வரலாறு  என்பது அந்தந்த கால கட்டத்தில் எழுதப் பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சியில்  கிடைத்த சான்றுகள் ஆகியவற்றின் மூலம் வூகிக்கப் பட்டு எழுதப்  படுவதே.

                  File:AdamsBridge02-NASA.jpg

இந்திய வரலாறு மிக தொன்மையானது. இந்திய வரலாற்றை புத்தருக்கு முன் புத்தருக்கு பின் எனப் பிரிக்கலாம். ஏனெனில் புத்தரின் காலம் கி.மு 563   ஆகும்.  ஏனெனில்  அலக்சாண்டர் இந்தியாவின் மேல் படை எடுத்த காலம் கி.மு. 326   ஆகும். புத்தருக்கு பின் ஏறக் குறைய 150  வருடங்களுக்குப் பின். புத்தருக்கு  பிந்தைய வரலாறு மேலை நாட்டினரால்  பதிவு செய்யப் பட்டு இருக்கிறது. புத்தருக்கு முந்தைய வரலாற்றை நாம் எண்ணிப் பார்க்கிறோம்.


புத்தருக்கு முந்தைய கால கட்டத்திலே   இந்திய சமுதாயம் பண்பாட்டிலும் , நாகரீகத்திலும் வளர்ச்சி அடைந்து செல்வச் செழிப்பு உள்ள நாடாகவே இருந்திருக்கிறது. சிந்து, கங்கை முதல் காவிரி வரை பல நதிகள் இந்தியாவில் வளமைக்கு உதவியுள்ளன.
இப்போது நாம் காணும் இராமாயணம் பண்டைய இந்தியாவில் நடை பெற்ற வரலாற்று நிகழ்வா என்பதே நம்முடைய ஆராய்ச்சிப் பொருள்.

இராமாயணமும், அதற்குப் பிறகு எழுதப் பட்ட மகாபாரதமும் புனைவு என்று சொல்லி விடுவது
எளிதான விடயம்.  நடந்து இருக்கக் கூடுமா என்பதே ஆய்வு.
இராமாயணம் வரலாற்று நிகழ்வாக இருந்திருக்க கூடும் என்பதற்க்கான வாய்ப்புகள் என்ன?

இராமாயண கால கட்டத்திலேயே எழுதப் பட்டதாகக் சொல்லப் படும்  வால்மீகி இராமயணம்  ஒரு நூல் ஆதாரமாக உள்ளது.




இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாலம் போன்ற பகுதியானது இராமயணத்தில் சொல்லப் பட்ட பாலமாக இருக்கக் கூடுமா என்பது ஆராயப் பட வேண்டிய ஒன்று. இது பற்றி அகழ்வாராய்ச்சி செய்யப் பட வேண்டும் என்று நீதி மன்றங்கள் சொல்லி உள்ளன. ஆனால் அரசாங்கம் அதை ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை.


இராமயணத்தில் சொல்லப் பட்டுள்ள நிகழ்வுகள் பலவும் இயற்கயான நிகழ்வுகளாகவே உள்ளன. இராமன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். எந்த ஒரு அதிசத்தையும் இராமன் நிகழ்த்தியதாக இல்லை. கடலை இரண்டாகப் பிளந்து நடுவிலே நடந்து செல்வது போன்ற அதிசய நிகழ்வுகள் எதுவும் இல்லை. கடலைக் கடக்க பாலம் அமைத்து சென்றதாக உள்ளது.


இராமயணத்தின் முக்கிய அம்சமான வானரங்கள் என சொல்லப் படுபவை குரங்கில் இருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையும் கட்டத்திலே இடைப் பட்ட கட்டமாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

                 

 மொத்தத்திலே இராமயணம் ஒரு புனைவாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன, இராமாயணம் உண்மையில்  நடந்த  நிகழ்வாக இருக்க அதை விட வலுவான வாய்ப்புகள் உள்ளன.

Monday, January 10, 2011

குரு பக்த சிரோன்மணிகளே .. உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால்......

குரு இருந்தால் நல்லதுதான். தகுதியான குரு கிடைக்கும் போது அவரை விட்டு விட்டு செல்வது , பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர் பானையை உடைத்தது போலாகும்!

ஆனால் குரு என்ற  ஒருவர் இருந்தே  ஆக வேண்டும் என்பது இல்லை. தீவிரமான வைராக்கியம் உள்ள யாரும் அப்படியே சந்நியாசி ஆக விடுவான், இந்த உலகப் பொருட்கள் , சொத்து, சுகம் உட்பட எதுவும் தன்னைக் காக்க வராது, காக்கவும் அவற்றால் முடியாது என்பதை திண்ணமாக மனதில் பதிந்தவனுக்கு அப்போதே சன்யாசம் தான். 

குரு  சன்யாசம் குடுத்தாலும்,  வாழ்க்கையின் கூறுகளை ஆராயாதவன் சந்நியாசி ஆனாலும் மறுபடியும் ஆசை வலையில் விழுந்து விடுவான்.

விவேகத்தினால ஏற்பட்ட வைராக்கியம்- அறிவினால் உண்டான மன உறுதிதான் ஒருவனை சன்யாசி ஆக மாற்றுகிறது.

சகஸ்ர நாமம் கற்றுக் கொள்ள கூட குரு வேண்டும் என்றால், உபநயனத்தின்  போது குரு சொல்லி, தந்தை   காயத்ரி  மந்திரத்தை சொல்கிறார். குருவும் அந்த மந்திரத்துக்கு அர்த்தம் சொல்வது இல்லை. தந்தையும் சொல்வது இல்லை. குரு தக்ஷினையை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார்.  காயத்ரி மந்திரத்துக்கான அர்த்தத்தை புத்தகத்தைப் பார்த்துதான்  பலரும் அறிந்து கொள்கின்றனர்.  
 மனதிலே உண்மையை  தெரியச் செய்யும் ஒளியை வேண்டி, அந்த ஒளிதான் முக்கியமானது என்று அதைத் தவிர வேறு எதையும்  எண்ணாமல்  காயத்ரி மந்திரத்தை மனக் குவிப்புடன் சொன்னாலேதான் ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமாகும். வெறுமனே அர்த்தம் தெரியாமல் ,  'குரு' சொன்னது போல மந்திரத்தை ஒப்பித்து விட்டு போனால் பலன் கிடைக்குமா?  இதைத்தான்   சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்)  நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரனே என்றார் .

குரு குரு என்று ஓவர் ஹைப் குடுப்பதால் கார்ப்பரேட் குருமார்கள் என்று சொல்லப் படுபவர்க்ளுக்குத் தான் லாபம், அதோடு அவர்களை சுற்றி சுற்றி வந்து சேவை செய்யும் முக்கியஸ்தர்களுக்கும் கொஞ்சம் லாபம் கிடைக்கும். -  நஷ்டம்,  இந்து மதத்திற்குத்  தான்.
  குரு பக்தி  என்ற  பெயரிலே "குரு இருந்தால்தான்" என்று குருவுக்கு ஹைப் குடுப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைக் காப்பதே பெரும்பாடாக உள்ளது. 

 கடந்த முப்பது நாற்பது  வருடத்தில் இப்படி குரு ஹைப் குடுத்தே  பில்லியநேர் குருக்களையும் உருவாக்கி இந்து மதத்தை  பின்னடைவு அடைய வைத்து விட்டனர். 

அப்பாவி  பாமர மக்களின் அமைதியான கடவுள்  பக்தியே இப்போது இந்து மதத்தைக் காத்து நிற்கிறது.
நல்ல குரு இருந்தால் வரட்டும். இல்லையேல் குரு இல்லாமலே இருக்கலாம்.

ஆதி சங்கரர் , இராமானுஜர், மத்வர் இவர்கள் காலத்துக்கு அப்புறம் எந்த குரு வந்து மக்களை வழி  நடத்தினார்கள்? மக்களுக்கு எந்த குருவையும் தெரியாது.
புத்த மதத்தால் அப்புறப் படுத்தப் பட்ட கடவுள்களை ஆதி சங்கரர் மீட்டுக் கொடுத்து எல்லோரும் வழி பட செய்தார். அதை வைத்தே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இன்னும் பல்லாயிரம் வருடம் அப்படியே நடக்கும். 

சுவாமி விவேகானந்தர்  வந்து  மேலை  நாட்டினருக்கு இந்து மதம் ஒரு சிறப்பான மதம் என்பதை அறியச்  செய்து,  இந்து மதத்தின் மீது போடப்பட்ட  குப்பைகளை நீக்கி, மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார். 

அது போல நல்ல குருக்கள் வருவதானால் வரட்டும். இல்லையானால் யாரும் வேண்டாம், மக்களே பார்த்துக் கொள்வார்கள். 

குரு துதி பாடி ஹைப் குடுத்து பேரையும் புகழையும் உருவாக்கி கீழே விழும்போது பாதிப்பு  இந்து மதத்திற்கு தான்.  

மரியாதைக்குரிய குரு பக்த  சிரோன்மணிகளே, நீங்கள் இந்து மதத்திற்கு நல்லது  செய்வதாக நினைத்துக் கொண்டு  குரு அவசியம் என நினைத்து, இப்படி  அவ்வப் போது யாரையோ  பிரபலமான குருவாக்கி  இந்து மதத்தைக் காயப் படுத்தாமல் இருந்தால் போதும். இந்து மதம் அதன் பாட்டிலேயே சிறப்பாக செல்லும். 

ஆன்மீகம் என்பது என்ன?

மனிதனை விடுதலை அடைந்தவனாக , முழு சுதந்திரம் உடையவனாக, எந்த ஒரு துன்பமும் தன்னை வருத்தாத மன  நிலையை அடைந்தவனாக, தன் எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் வலிமை உடையவனாக உயர்த்துவது எதுவோ, அதுவே ஆன்மீகம்.


இதை நாம் சொல்கிறோம் என்றால் அதற்க்கு முன்பாகவே நாம் தீர்மானித்து என்ன என்றால் – எல்லா உயிர்களும் அடிமை நிலையிலே, தங்கள் நிலையை, எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வலிமை இல்லாதவராக, பல வகையான துன்பங்கள்  தங்களை வந்து தாக்கும் நிலையிலே  உள்ளனர் (prone to sorrow) என்பதாகும்.

எல்லா உயிர்களையும் பீடித்துள்ள மூன்று முக்கிய துன்பங்கள், பிணி,   மூப்பு, சாக்காடு ஆகியவை.
இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகின்றன.
 வாய்க்கால் , வரப்பு தகராறு, பையனுக்கு பள்ளியில் இடம் கிடைக்கவில்லை, நன்கு வேலை செய்தும் அலுவலகத்தில் இன்னொருவனுக்கு பிரமோசன், மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா- மனைவி தகராறு, …… பிரச்சினைக்கு , துன்பங்களுக்கு பஞ்சமில்லை. எல்லா பிரச்சினையும் பேசித் தீர்க்கலாம்யா, தைரியமாக இரு- ஆனால் எத்தனை முயற்சி செய்தாலும்,  பகுத்தறிவின் அடிப்படையிலே அறிவியல், மனோவியல், பொருளாதாரம், பொறியல், அவியல்…எதை பயன்படுத்தி எவ்வளவு அறிவு பூர்வமாகப் போனாலும், அதையும் தாண்டி துன்பம் வந்து சேருவதை நம்மால் தடுக்கும் வலிமை உடையவராக இருக்கிறோமா?  
 
 
நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக, எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
 
அப்படி ஏதோ குறைவான துன்பம் இருக்கும் வாழ்க்கையை வாழும் வாய்ப்பு நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தாலும்,  பாடுபட்டு தேடி சேர்த்த சொத்து, பணம், கவரவம், உறவு, நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு செல்லும் நிலையிலேயே இருக்கிறோம்.  All the properties. wealth, friends, relatives, prestige…etc shall be removed once for all,  (irrevokabaly removed) from us.
இரக்கமற்ற இயற்கையின் இரக்கத்தை நம்பி வாழ்கிறோம். We are at the mercy of a system which has no mercy.
 
 
 
நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக , எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை.



தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?
ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ நமுடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌இருக்க‌ முடியும்? ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?


எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?
பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?
நான் உட்ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன்.


உட‌ல் இற‌க்கும் போது, உயிர் தொட‌ர்ந்து வாழ்ந்தாலும் ச‌ரி, இல்லை உயிரும் சேர்ந்து அழிந்தாலும் ச‌ரி -  எப்ப‌டியாக‌ இருப்பினும் நாம் ந‌ம்மைக் காக்க‌ இய‌லாத‌ அடிமை வாழ்க்கை வாழ்கிரோம்.


 அர‌ச‌னோ, ஆண்டியோ, செல‌வ்ந்த‌னோ, அறிங்க‌னோ, பாம‌ர‌னோ, ஏழையோ, வெள்ளைக் கார‌னோ, க‌றுப்ப‌னோ, ம‌னித‌னோ, மாடோ எல்லோரும் அடிமை நிலையில் இருப்ப‌தாக‌வே நாம் தீர்மானிக்கலாம். இது ஒரு PROBLEM .
 இத‌ற்க்கு  SOLUTION த‌ருவ‌து எதுவோ அதுவே ஆன்மீக‌ம்.

ஆன்மீக முயற்ச்சிக்கு, குரு கண்டிப்பாக தேவை என்பது சரியா?

இந்தியாவைப் போல குருவிற்கு மரியாதை கொடுக்கும் சமுதாயம் இருக்குமா என்பது சந்தேகமே. ஒன்றாம் வகுப்பில் ஆனா  ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் முதல் , கராத்தே ஆசிரியர், இசை ஆசிரியர் , ஆன்மீக குரு வரை எல்லோருக்கும் என்றும் மதிப்புக் கொடுக்கிறான் இந்தியன். பின்னாளில் தான் பெரிய ஆளாக வந்தாலும், பள்ளி டீச்சர் எதிரில் வந்தால் சிரித்து,  வணக்கம் செலுத்தி நலம் விசாரிப்பான்  சராசரி  இந்தியன். குருவுக்கும் , மாணவனுக்கும் உள்ள பந்தம் அலாதியானது, பிரிக்க முடியாதது.


நானும் எனது ஒன்றாம்  வகுப்பு ஆசிரியை முதல் எல்லா ஆசிரியர்களிடமும் மிக்க மரியாதை வைத்திருப்பவன் தான். ஆன்மீகத்தில், தத்துவத்தில்  என்னுடைய குருவாக நான் பாடம் கற்றது ,சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், கிருஷ்ணர், சாக்ரடீஸ், புத்தர்,   இயேசுகிறிஸ்து, முஹம்மது நபி, குரு நானக், கபீர், பெரியார், பாரதியார், பட்டினத்தார்,  தியாகராஜர்... ஆகியோரிடம் இருந்து.


இந்து மதத்தில் குருவுக்கு முக்கிய இடம் உண்டு.
குரு மீது ஒரு இந்து வைத்திருக்கும் மரியாதையும், அன்பும் பிணைப்பும் அளவற்றது. ஒரு மனிதனின் மனநிலை அடையக் கூடிய உச்ச கட்ட நிலைக்கு அவனைக்  கொண்டு சொன்று, துன்பத்திலே துடிக்காத மனநிலைக்கு ஒருவனை உயர்த்தி, ஒருவன் தன் இயல்பின் உண்மையான நிலையை அறியும்படி செய்து, அவனை சுதந்திரமுள்ளவனாக ஆன்மீக குரு ஆக்குகிறார் என்பதே மாணவனின் எண்ணம். சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சென்னை சொற்பொழிவில் "நான் சொல்லியதில் மனித குலத்துக்கு ஏதாவது நன்மை இருந்தால் அது என்னுடைய  குரு இராம கிருஷ்ண  பரமஹம்சரால், நான் சொல்லியதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்க்கு காரணம் நானே" என்றார்.

சுவாமி விவேகானந்தருக்கு இராமகிரிஷ்ணர கிட்டியது போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிட்டியது போல எல்லோருக்கும் ஆன்மீக குரு கிடைத்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்கும். அப்படிக் கிடைக்காத பட்சத்திலே என்ன செய்ய முடியும்? குரு கிடைக்கவில்லை என்றால், முந்தைய குருக்கள் சொல்லியதை வைத்து படித்துப் பார்த்து நாமே  நம்மை ஆன்மீக ரீதியில் உயர்த்திக்  கொள்ள முயல்வதுதானே  நடக்கக் கூடியது? சரியான குரு கிடைக்கவில்லை என்றால் , கிடைக்கும் யாரையாவது குருவாக வைத்துக் கொள்ள முடியுமா?
ஆனால் குரு கண்டிப்பாக  அவசியம், குரு இல்லாவிட்டால் முடியாது என்று ஒரு conditional clause வைப்பது ஏன்?
ஆனால் குருதான் எல்லாம், குரு இல்லாவிட்டால் ஆன்மீகம் இல்லை என்ற கருத்தை பலரும் சொல்கிறார்கள்.

ஆன்மீக முன்னேற்றத்துக்கு குரு கண்டிப்பாக வேண்டும் -இதை எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று விளக்க முடியுமா?

குரு இல்லாவிட்டால் ஆன்மீக முன்னேற்றம், விடுதலை கிடைக்காது என்று கீதையில் சொல்லி இருக்கிறதா? கீதையில் எனக்கு தெரிந்து குரு அவசியம் என்று சொன்னதாக ஒரு இடத்தில் கூட இல்லை. குரு என்கிற வார்த்தையை கூட கிருஷ்ணர் சொன்னதாக நினைவு இல்லை.

துரோணாச்சாரியாரைக் குறிக்க ஓரிரு இடங்களில் அர்ஜுனன் குரு என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார்- அது ஆன்மீக குருவைக் குறிக்க அல்ல, வில் வித்தை குருவைக் குறிக்க.
இப்படி ஆன்மீக முயற்ச்சிக்கு குரு என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் முடியாது என்று முட்டுக் கட்டை போடுவது சரியா?


அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிடைத்தது போல , விவேகானந்தருக்கு பரமஹம்சர் கிடைத்து போல சிறப்பான குரு கிடைத்தால் நல்லது. அப்படி கிடைக்கவில்லை என்றால் ஆன்மீக முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. பொருத்தம் இல்லாதவரை குரு, குரு என்று தலையில் வைத்துக் கொண்டாடினால், மக்களுக்கு, சமுதாயத்துக்கு, இந்து மதத்துக்கு பின்னடைவே உருவாகும்.


எல்லோரும் பள்ளிக்கு செல்கிறார்கள். கீதை உபநிடதங்கள் இவை எல்லாம் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டு கடைகளில் கிடைக்கின்றனர். அவற்றைப் படித்துதான் பலரும் இந்து மதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்கிறார்கள். கட உபநிடதம் போன்றவை புரிந்து கொள்ள மிக எளிதாகவும் உள்ளன.

இன்றைக்கு ஆன்மீக விடயங்களைப் பற்றி சிந்திக்கும் பலரும்,  இப்படிப் படிப்பறிவில் கற்றதிலும், வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியாலும் , தாங்கள் மனக் குவிப்பு, பூசனை போன்றவற்றின் மூலம் பெற்ற ஆன்மீக முன்னேற்றத்தையும் அடிப்படையாக வைத்தே எழுதுகிறார்கள். எல்லோருக்கும் குரு இருக்கிறார்களா?

குரு என்று சொன்னால் அவர் ஆன்மீக முயற்ச்சியில் தானே வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும்- புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல, சுவாமி விவேகனந்தரைப் போல்.
வெறுமனே எழுதப் பட்டுள்ளவற்றை படித்து சொல்வதானால் அதை நாமே படித்துக் கொள்ளலாம். இன்னொருவர் சொல்லிக் கொடுத்தால் தவறில்லை.
ஆனால் அப்படி படித்துப் பொருள் சொல்லும் குரு இல்லை என்றால், நாம் படித்து தெரிந்து கொள்ள முடியாதா? யார் வேண்டுமானாலும் படித்து தெரிந்து கொள்ளலாம்.


இதை நாம் சொல்லுவது  ஏனென்றால், இன்றைக்கு பல இளைங்கர்கள் கூட ஒரு குரு தேவை, அவரைத் தேடு, அவர் காலில் விழு, அவர் சொல்வதை அப்படியே கேள்......... என்கிற வலையில் விழுகிறார்கள்.  பின்னாளில் "குரு"வுக்கு ஏதாவது ""பிரச்சினை'' என்றால் "சே, அவரு நல்லவருப்பா, ... இவங்க சும்மா சொல்றாங்க" என்று பில்ட் அப் கொடுக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள். அப்போதும் குருவை விட முடியாது. ஏனெனில் தான் இத்தனை நாளாக ஏமாற்றப் பட்டதை   ஒத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது.


இன்றைக்கு குரு பிசினஸ் ஒரு சூப்பர் பிசினெஸ் என்பது பலருக்கும் தெரிந்தே உள்ளது. ஆதி சங்கரர் போல கையிலே நயா பைசா இல்லாமல் இந்தியா முழுவதும் கால்நடையாக சுற்றி வரும் குரு யாராவது இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.  ஆதி  சங்கரர் கூட துறவி, இல்லறத்தாராக இருந்து கொண்டு எனக்கு பணம் காசு வேண்டாம்,  நிதி சால சுகமா, இராமு நீ சந்நிதி சேவா சுகமா"'  என்று பாடி தெருவிலே உஞ்சி விருத்தி எடுக்கும் குரு தியாகராஜர் போல யாரவது இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

குரு பிக்ஷா பண் ட்  என்று போட்டு பணம் வசூல் செய்கிறார்கள். குரு பிக்ஷா என்றால் அவர் ஆதி சங்கரர் போல, தியாகராஜர் போல தெருவில் வந்து பிஷை எடுக்க வேண்டும் அல்லவா, அதுதானே இந்து மதம் காட்டிய வழி. இப்படி பண்ட் போட்டு வசூலிப்பதுதான் சனாதன தர்மமா? ஆதி சங்கரர் சொல்லி இருக்கிறார்   அர்த்தம் அனர்த்தம் - பணம் காசு  கெட்டதே செய்யும் - என்று. அப்புறம் எதற்கு இவர்களுக்கு  பணம் காசு.  கட்சிக் காரர் நிதி வசூல்  செய்து கட்சி தலைமையிடம் பேர் வாங்கி சீட்டு வாங்குவதற்கும்    இதற்கும் என்ன வித்யாசம்?  என் தலைவன் இல்லாவிட்டால் இந்த நாடு என்ன ஆகும் என்று சொல்வது போலத்தான் "குரு" இல்லாவிட்டால் ஆன்மீகம் இல்லை என்பது.

உங்களிடம் யாரவது வந்து,  குரு
ஒருத்தர் இருக்கிறார்  , வாங்க பார்க்கலாம் என்றால் அவர்களிடம் உங்கள் குரு கையிலே பணம் வைத்துக் கொள்ளாமல் , சொத்து , பத்து இல்லாமல் இருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் பிஷை எடுத்து உண்கிறாரா என்று கேளுங்கள்.  

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!

சங்கீத சீசன்  சென்னையில் களை கட்டுகிறது.  பிளைட் பிடித்து வெளி நாட்டில் இருந்து பலரும் சென்னைக்கு பறந்து வருகின்றனர். சென்னையில் பல சபாக்கள் உள்ளன. எல்லாம் ஹவுஸ் புல். சீட் கிடைப்பது அரிது.  புதிய  இளம் கலைங்கர்களுக்கு பாட இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

நான் சிறுவனாக இருக்கும் போது கேட்டது எல்லாம் சினிமாப் பாட்டுதான்.  “மை நேம் இஸ் பில்லா” , “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” போன்ற பாடல்கள் தெருவிலே ஒலித்துக் கொண்டு இருக்கும். எனக்கு தமிழ் சினிமாப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இந்த கர்நாடக சங்கீதம் என்றால் எனக்கு புரியவே புரியாது.
என்னடா இது ஆஆ,  ஆஅ …..என்று அரை மணி நேரம் இழுக்கிறார்கள், இதை  இவ்வளவு பேர் உட்கார்ந்து கேக்குறாங்க, என்ன இருக்கு இதுல … என்று உண்மையிலேயே எனக்கு புரியாது.


ஆனால் கடந்த 8 வருடங்களாக கர்நாடக இசையை சிறிது சிறிதாக  ரசிக்க  ஆரம்பித்திருக்கிறேன் என்றால்,  இன்னும் சொல்லப் போனால் நான் வீட்டிலே பாடவும் செய்கிறேன் அதற்க்கு காரணம்  திரு. பால முரளி கிருஷ்ணா, இளையராஜா,  திருமதிகள்   எம். எஸ். எஸ்.  , எம். எல்.வி. ,  டி.கே.பி   ஆகியோரின் பாடல்களை சி.டி.யில்  கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் தான். 






மேலே தொடரு முன் இசை ஞானி இளையராஜா அவர்களின்   இந்தப் பாடலை  காணுமாறு, கேட்குமாறு கோருகிறேன். இது சினிமாப் பாடல்தான்.

http://www.youtube.com/watch?v=-h96lau-B0I&feature=related


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்,

 அதில் வாழும் தேவி நீ, இசையை மலராய் நானும் சூட்டுவேன்!

ஆத்மா ராகம்  ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே,

 உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!
……
இந்த பாடல் ஒரு காதலன் தன காதலியை நோக்கி பாடும் பாடலாகும். ஆனாலும் அந்த காதலன் ஒரு பாடகன் பாத்திரமாக  உள்ளதால், அந்தப் பாடகன் இசையின் கூறுகளை தன் காதலிக்கு விளக்கி வாழ்வையும்  இசையையும் ஒப்பு நோக்கி இருக்கிறார்ன். உயிரின் ஜீவ நாடி சரியான இடை வெளியில் துடிப்பது போல இசைக்கு தாளம் முக்கியமான உயிர்த் துடிப்பாக உள்ளது.

காமம் தேடும் உலகிலே, கீதம் என்னும் தீபத்தால்,

ராம  நாமம் மீதிலே, நாத தியாக ராஜரும்,

ஊனை உருக்கி  உயிரில் விளக்கை ஏற்றினார் அம்மா, 

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்!

இசை துறையில்  சிறந்து விளங்கிய  தியாகராஜ சுவாமிகளை பற்றியும் பாடலில் குறிப்பிடுகிறார். இசையையும் ஆன்மீகத்தையும் தன் இரத்தமும் மூச்சுமாக வைத்து வாழ்ந்தவர் தியாகராஜர்.

 சத்குரு   தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை மிக அற்புதமானது, இலக்கண சுத்தமாக எதுகை மோனையுடன் கூடிய 600 க்கும் மேற்பட்ட பாடல்களை  அவர் இயற்றி உள்ளார். அவை எல்லாவற்றுக்கும் இராகங்களின் மூலம் இசையை அமைத்து தானே பாடியும் இருக்கிறார். பாடாலாசிரியர் , இசை அமைப்பாளர், பாடகர் ஆகிய மூவராகவும் அவரே இருந்து இருக்கிறார்.


இதில் முக்கிய விடயம் என்னவென்றால் தன்னுடைய பாடலுக்கோ, இசைக்கோ அவர் பணம் எதையும் வாங்கவில்லை.  வீதியில் தன்னுடைய பாடல்களை பாடிக் கொண்டே உஞ்சி விருத்தி என்னும் பிச்சை எடுத்து, அதை வைத்து கஞ்சி குடித்து வாழும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து விட்டார் அவர்.  


தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர், இவரை தன் அரசவையில் ஆஸ்தான கவிஞராக பதவி  அளித்து ஆயிரம் பொன்னும் அளித்து அவரை அழைத்த போதும்,    அவர் பதவியையும் மறுத்து, பணத்தையும் மறுத்து மக்கள கவிஞராகவே இருந்து விட்டார்.


அவர் தலைவராக ஏற்ற இராமரின் கொள்கைப் படியே, பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில் கட்டக் கூடிய வேட்டி போன்றது என்பதை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

தியாகராஜரின் பாடல்களின் அர்த்தத்தை மனதில் வாங்கி , ஆராய்ந்து அதில் கலப்பவர்கள்  மனதிலே உள்ள நல்ல குணங்கள் இன்னும் அதிகமாகும் வகையிலே, மனதிலே அமைதி உருவாகும் வண்ணம் பாடலின் பொருளும் இசையும் ஆக்க பூர்வமாக  அமைந்து உள்ளன. 

பகுத்தறிவையும், நம்பிக்கையையும் இணைத்து ஒரு மிகச் சிறந்த ஆன்மீக வழியை இசையின் மூலம் வழங்கி இருக்கிறார் சத்குரு  தியாகராஜா சுவாமிகள்.